கோவையில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு :மர வியாபாரி கைது

கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (45). மர வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு விட்டிருந்தார். இந்த வாடகை வீட்டில் வசித்த 15 வயது மாணவி ரவிக்குமார் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் ரவிக்குமார் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவியை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்து வந்துள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக நேற்று மாணவி தனது குடும்பத்தினரிடம் இந்த விவரங்களை கூறி அழுதுள்ளார். இது கோவை மத்திய பகுதி அனைத்து மகளிர் போலீசில் புகார் தரப்பட்டது. போலீசார் சிறார் பாலியல் துன்புறுத்தல் பிரிவில் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து ரவிக்குமாரை கைது செய்தனர்.
ரவிக்குமார் செல்போனை ஆய்வு செய்தபோது அவர் சிறுமியிடம் பாட்டு பாடி டான்ஸ் ஆடிய வீடியோ மற்றும் வேறொரு பெண்ணுடன் ஜாலியாக இருந்த வீடியோ இருந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *