கோவையில் போலீசாரை தாக்கி தப்ப முயன்ற வழிப்பறி திருடன் மீது துப்பாக்கி சூடு..!

பாலமுருகன். .

கோவை புறநகர் பகுதியில் கல்லூரி மாணவர்களை மிரட்டி பல்வேறு பகுதியில் பணம் மற்றும் பல்வேறு பொருட்களை வாலிபர் ஒருவர் பறித்து வந்ததாக தெரிகிறது.

இது தொடர்பாக சூலூர் கருமத்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழிப்பறியில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன் (26) என்பவர் ஈடுபட்டது தெரிய வந்தது.

இவர் மீது 30க்கும் மேற்பட்ட திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் இன்று சூலூர் போலீசார் பாலமுருகனை மடக்கி பிடித்து கைது செய்ய முயன்றனர். அப்போது பாலமுருகன் சூலூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து தப்பி ஓட முயன்றார் . மேலும் அவர் போலீசாரை தாக்க தொடங்கியதாக தெரிகிறது.

போலீசார் அவரை பிடிக்க முயன்ற மேலும் அவர் அடாவடி செயலில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு கருவி அவரது வலது காலில் முட்டியில் துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் ரத்த வெள்ளத்தில் அவர் கீழே விழுந்தார். இதைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது தொடர்பாக சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *