கோவையில் 3 நகராட்சிகளில் ஆதார் மையம் துவக்கம்
கோவை மாவட்டத்தில், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நிரந்த ஆதார் மையம் இருக்கிறது. இது தவிர தாலூகா அலுவலகங்கள், ஆர்எஸ்புரம், பொள்ளாச்சி மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு போன்ற பகுதிகளில் வங்கி கிளைகளில், தலைமை தபால் அலுவலகம் போன்றவற்றில் ஆதார் மையங்கள் உருவாக்கப்பட்டது.
மாநகராட்சி அலுவலகங்களில் ஆதார் மையங்கள் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் கூடுதலாக மதுக்கரை, கூடலூர், காரமடை நகராட்சி அலுவலகத்தில் நிரந்த ஆதார் மையம் துவக்கப்பட்டது. இந்த நகராட்சிகளில் உள்ள ஆதார் மையங்களை அந்த பகுதி மக்கள் பயன்படுத்தலாம் என ஆதார் மைய நிர்வாகி சந்தோஷ் தெரிவித்துள்ளார்.
மாவட்ட அளவில் ஆதார் மையங்களில் திருத்தம் செய்ய, சிறார்களுக்கு புதிய ஆதார் பதிவு செய்ய கூட்டம் அதிகமாகி வருகிறது. தாலூகா அலுவலகங்களில், தபால் அலுவலகங்களில் இதற்கேற்ப ஆதார் சென்டர்கள் உருவாக்கப்பட்டது. மேலும் கூடுதல் ஆதார் மையங்கள் அமைக்கப்பட்டதின் மூலமாக பொதுமக்கள் எளிதாக பயன்பெறலாம்.
தினமும் பல நூறு பேர் ஆதார் மையங்களை நாடி வருகிறார்கள் சிறப்பான சேவை வழங்கப்படுகிறது என ஆதார் மையத்தினர் தெரிவித்தனர்.
