கோவை சர்க்கார் சாமக்குளத்தில் நாளை புதிய சார்பதிவாளர் அலுவலகம் திறப்பு
கோவை மாவட்டத்தில் 18 சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளது தற்போது கூடுதலாக சர்க்கார் சாமக் குளத்தில் 19வது சார் பதிவாளர் அலுவலகம் நாளை திறக்கப்பட உள்ளது.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் முறையில் அலுவலக கட்டடத்தை நாளை திறக்க உள்ளார். பெரியநாயக்கன்பாளையம் மற்றும் அன்னூர் சார் பதிவாளர் எல்லைக்குட்பட்ட சில பகுதிகள் பிரிக்கப்பட்டு சர்க்கார் சாமகுளம் அலுவலக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
அக்ரஹார சாமக்குளம் கொண்டையம் பாளையம் வெள்ளமடை கீரணத்தம் சர்க்கார் சாமக்குளம் போன்ற பகுதிகள் இந்த அலுவலக எல்லைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதேபோல் சூலூர் சார் பதிவாளர் அலுவலகம் புதிய அலுவலக கட்டடத்திற்கு நாளை மாறவுள்ளது. மேலும் கோவை தெற்கு மாவட்ட பதிவாளர் அலுவலகம் காந்திபுரம் பகுதியில் இருந்து சூலூர் சார் பதிவாளர் அலுவலக கட்டட வளாகத்திற்கு மாற்றப்பட உள்ளது.
கிணத்துக்கடவு சார்பதிவாளர் அலுவலகம் புதிய அலுவலக கட்டடத்திற்கு நாளை முதல் மாற்றப்படும். இதற்கான ஏற்பாடுகளை கோவை மண்டல பத்திரப்பதிவு டிஐஜி பிரபாகரன் உத்தரவின் பேரில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
