வணிக சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை; கோவை கலெக்டர் தகவல்
கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் இன்று நிருபர்களிடம் கூறியதாவது;
கோவை மாவட்டத்தில் வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாடு தற்போது இல்லை. ஏற்கனவே, சிபிசிஎல், ஐஓசிஎல் உள்ளிட்ட கேஸ் ஏஜென்சியுடன் கடந்த சனிக்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டது. சிலிண்டர் தட்டுப்பாடு இருந்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என ஏஜென்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து மாவட்ட நிர்வாகம், மாநில அரசுடன் கலந்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது, வர்த்தக சிலிண்டருக்கு உடனடி தட்டுப்பாடு என எதுவும் இல்லை என்றார்.
மதிய உணவு சாப்பிட்ட மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 44 பேருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
அனைத்து பள்ளிகளிலும் உள்ள சமையல் அறைகள், பள்ளி வளாகத்தில் மாஸ் கிளீனிங் செய்ய உத்தரவிடப்பட்டு இருக்கிறது. ஊரக பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பிடிஓ மூலமாக நூறு சதவீதம் சுகாதாரத்தை உறுதிப்படுத்த உள்ளோம். உணவுபாதுகாப்புத்துறை குழுவின் மூலமாக மாணவர்களுக்கு அளிக்கப்படும் உணவு குறித்து ஆய்வு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என கலெக்டர் தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில் இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது. இதில் தேர்வு எழுதிய மையங்களில் கலெக்டர் திடீர் ஆய்வு செய்து முறையாக தேர்வு நடத்தப்பட்டு வருகிறதா என விசாரித்தார்.
