கோவையில் நடுரோட்டில் பற்றி எரிந்த கார்
கோவை சூலூர் முத்து கவுண்டன் புதூர் பகுதி ரயில்வே மேம்பாலம் வழியாக இரவு வாகனங்கள் சென்று கொண்டிருந்தது.
அப்போது பைக் மீது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் பைக்கில் சென்ற வாலிபர், பைக்குடன் மேம்பாலத்திலிருந்து நிலை தடுமாறி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இது தொடர்பாக சூலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கோவை மாதம்பட்டி பகுதி வழியாக அரசு துறை வாகனம் ஒன்று இன்று இரவு சென்று கொண்டிருந்தது. இந்த காரின் முன் பகுதியில் திடீரென தீப்பிடித்தது. காரை ஒட்டியவர் அப்படியே நிறுத்தி விட்டு இறங்கி விட்டார்.
தீ வேகமாக எரிந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் தீயை போராடி அணைத்தனர். இருப்பினும் காரின் பெரும்பகுதி எரிந்து நாசமாகி விட்டது. கார் ஒயர் பழுது காரணமாக தீ பிடித்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக பேரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
