கோவையில்15 ஆயிரம் ஓட்டு மிஷின்கள் விரைவில் ரீ செட்டிங்..
கோவை மாவட்டத்தில் 3117 ஓட்டு சாவடி மையங்கள் உள்ளது. மாவட்ட அளவில் சுமார் 32 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். கோவை மாவட்டத்திற்கான ஓட்டுப்பதிவு கருவிகள்
தெற்கு தாலுகா அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கமிஷன் சேமிப்பு குடோனில் வைக்கப்பட்டுள்ளது.
15 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஓட்டு பதிவு கருவிகள் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்கள் வைக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
இந்த கருவிகளில் கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட வேட்பாளர்களின் பெயர்கள் சின்னங்கள் இடம் பெற்றுள்ளது. மேலும் பதிவான வாக்குகள் குறித்த மொத்த விபரங்களும் இருக்கிறது. இவற்றை சரிபார்த்து ரீ செட்டிங் செய்யும் பணி அடுத்த மாதம் 11ம் தேதி துவக்கப்பட உள்ளது.
இதற்காக பெங்களூரில் இருந்து இவிஎம் தொழில்நுட்ப குழுவினர் கோவை வர உள்ளனர். இவர்கள் இந்த ஓட்டுப்பதிவு கருவிகளை ஆய்வு செய்து ரீ செட்டிங் செய்து வைக்க உள்ளனர் . இந்தப் பணிகள் சுமார் 40 நாட்கள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் கோவை தெற்கு , வடக்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு , கவுண்டம்பாளையம் உட்பட பத்து தொகுதிகளில் பயன்படுத்தப்படவுள்ள அனைத்து ஓட்டு மிஷின்களிலும் ரீ செட்டிங் நிலைமைக்கு கொண்டு வரப்படும். மேலும் இதில் பழுதான மற்றும் பயன்பாட்டற்ற ஓட்டு பதிவு கருவிகள் நீக்கம் செய்யப்பட உள்ளது.
