வேட்பு மனுக்கள் நிராகரிக்க நிபந்தனைகள் விதித்து உத்தரவு
கோவை கோவை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் சட்ட மன்ற தொகுதிகள் வாரியாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் எந்தெந்த சட்ட மன்ற தொகுதிக்கு எங்கு வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது வரும் 30ம் தேதி முதல் ஏப்ரல் மே தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடக்கவுள்ளது.
அரசு விடுமுறை நாட்களில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய முடியாது. அலுவலக நாட்களில் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும். வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய குவிவதை தடுக்க முன்னதாக இணையதளம் மூலம் வேட்பு மனு தாக்கல் குறித்து விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளை தேர்தல் பிரிவினர் செய்து வருகின்றனர்
இந்த நிலையில வேட்பு மனு தாக்கல் நாட்களில் சட்ட வாரியாக தேர்தல் நடத்தும் அலுவலர உதவி தோதல் நடத்தும் சட்டமன்ற தொகுதி அலுவலர்கள் செய்ய வேண்டிய பணிகள் தொடர்பாக இன்று தேர்தல் கமிஷன் அதிகாரிகள் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக கூட்டம் நடத்தினர்.
தேர்தல் பார்வையாளர்கள், மாவட்ட தேர்தல் அதிகாரியான கோவை கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் வருவாய் அலுவலர் நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் அதிகாரிகள் நிபந்தனைகள் தொடர்பாக பேசியதாவது
இதில் மனு தாக்கல் செய்யும் அலுவலகத்திலிருந்து 100 மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நிறுத்த அனுமதி கிடையாது. மனு தாக்கல் செய்பவர், முன் மொழிபவர், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையிலான நபர்களுடன் மட்டும் செல்ல வேண்டும்.
வாகனங்களில் கூட்டமாக செல்ல கூடாது. பட்டாசு வெடிக்க கூடாது மேளதாளம் கூடாது கட்சி சின்னம் கொடி இருக்க கூடாது கோஷம் போடக்கூடாது, தொண்டர்களை அழைத்து வரக்கூடாது. ஒருவர் அதிகபட்சமாக 4 வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.
அபிடவிட் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்ய வேண்டும் . வைப்பு தொகை அதற்கு உரிய பிரிவு வகையில் செலுத்த வேண்டும். தேர்தல் நடத்தை விதிகளை மீறக்கூடாது என நிபந்தனைகளில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வேட்பு மனு பத்திரத்தில் வேட்பாளரின் கையொப்பம் இல்லாமலோ அல்லது தேவையான எண்ணிக்கையிலான முன்மொழிபவர்களின் கையொப்பம் இல்லாமல் இருந்தால் நிராகரிக்கலாம். தேவையான பாதுகாப்பு வைப்புத்தொகை செலுத்தப்படவில்லை. வேட்பாளர் போட்டியிடும் பட்சத்தில், வாக்காளர் பட்டியல் பதிவின் சான்று சமரப்பிக்கப்படாமல் இருந்தால் அனைத்துக் கட்டங்களையும் பூர்த்தி செய்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு அறிவிப்பு வந்த பிறகும், விண்ணப்பதாரர் அதனைச் சமர்ப்பிக்கவில்லை என்றால் நிராகரிக்கலாம்.
சினைங்கள் தொடர்பான அறிவிப்பில் உள்ள குறைபாடு அல்லது வேறு ஏதேனும் முக்கியமற்ற காரணங்களால்
வேட்பு மனு நிராகரிக்கப்படக் கூடாது. விண்ணப்பதாரரின் பிரமாணப் பத்திரத்தில் உள்ள எந்தவொரு தவறான தகவலும், இயல்பாகவே, ஒரு குறிப்பிடத்தக்க குறைபாடாகக் கருதப்படாது.
இருப்பினும் அதிகாரி அறிவிப்பு அனுப்பிய பின்னரும் பிரமாணப் பத்திரத்தை சமரப்பிக்கத் தவறினால் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஒரு வேட்பாளரின் முதல் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டால் மற்ற வேட்புமனுக்களும் ஏற்கவேண்டும் . பரிசீலனை நடவடிக்கைகள் நிறைவடைந்த பிறகு, தேர்தல் அதிகாரி படிவம் 4-ல் செல்லுபடியாகப் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்களின் பட்டியலைத் தயாரிக்க வேண்டும். அதாவது பரிசீலனையில் யாருடைய பரிந்துரைகள் செல்லுபடியாகும் எனக் கண்டறியப்பட்டதோ அந்த வேட்பாளர்களின் பட்டியலைத் தயாரிக்க வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் பதிவுசெய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் இதர மாநிலங்களின் கட்சிகள் சுயேச்சை வேட்பாளர்கள் என ஒவ்வொரு பிரிவிலும் பெயர்கள் தனித்தனியாக அகர வரிசைப்படி
அமைக்க வேண்டும் ஒரு வேட்பாளரின் பெயருடன் எந்தவொரு கவுரவ பட்டம், கல்விசார் பட்டம், பரம்பரைப் பட்டம், தொழில்சார்
பட்டம் அல்லது வேறு எந்தப் பட்டத்தையும் தயும் சேர்ப்பதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை இருப்பினும் பெயர்களை அகர வரிசையில் அமைக்கும்போது அத்தகைய பட்டங்கள் எந்தக் காரணத்திறகாகவும் கருத்தில் கொள்ளப்படககூடாது.
முறையாகப் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்களின் பட்டியலின் இரண்டு பிரதிகள், அடுத்து கிடைக்கும் தபால் மூலமாகவோ, தொலை நகல் மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது சிறப்பு தூதர மூலமாகவோ தலைமைத் தேரதல் அதிகாரிக்கு அனுப்ப வேண்டும்.
பட்டியலின் ஒரு பிரதி, அதன் ஆங்கில மொழிபெயர்ப்புடன் தேர்தல் ஆணையத்திறகு அனுப்ப வேண்டும்
பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்களின் பட்டியலானது அனைத்து வேட்பு மனுக்களின் பரிசீலனை நிறைவடைந்த அன்றே உடனடியாகப் தேர்தல் அதிகாரியால் அனுப்பு வேண்டும். வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதிக்கு முன்னர் அது ஆணையத்தைச் சென்றடையும்.
