அண்ணாமலை பீஸ் போன பல்பு; செந்தில் பாலாஜி அதிரடி பேட்டி…!
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி இன்று உக்கடம் கெம்பட்டி காலனி,
கோழிக்கடைசந்து, நாடார் வீதி, நாட்டை சந்து, பாளையம் தோட்டம், திருவள்ளுவர் நகர், உப்புமண்டி, பாரதி நகர், எல்ஜி தோட்டம், முத்து மாரியம்மன் கோயில் வீதி, பட்டக்கார அய்யாசாமி வீதி, தர்மராஜா கோயில் வீதி, பஜனை கோயில் வீதி, முனியப்பன் கோயில் சந்து, செட்டிவீதி, செல்வபுரம், காட்டேரி தோட்டம், சாமி அய்யர் புது வீதி,
பாலாஜி அவென்யூ, அசோக் நகர், சாவித்ரி நகர், விநாயகர் கோயில் வீதி, கன்னிகா அவென்யூ, அபிராமி நகர், ஜாம் கம்பெனி, பிரபு நகர், அசோக் நகர், சுப்பையா லே அவுட், சுண்டக்காமுத்தூர் ரோடு, குறிஞ்சி கார்டன், திரு நகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.
அவர் மக்களிடம் பேசுகையில், “திமுக அரசு மேகாவை மாவட்டத்தில் ஏகப்பட்ட திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றி தந்துள்ளது. செம்மொழி பூங்கா, அவினாசி ரோடு மேம்பாலம், மேற்கு பைபாஸ் என ஏராளமான திட்டங்களை கொண்டு வந்திருக்கிறோம். இது தவிர மகளிர் உரிமை தொகை உள்ளிட்ட திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளது,
என்றார். செந்தில் பாலாஜி பிரச்சாரம் செய்ய சென்ற போது வழி நெடுக பொதுமக்கள் ஆரத்தி எடுத்து நெற்றியில் திலகமிட்டு வரவேற்றனர். பல ஆயிரம் பேர் ஆரத்தியுடன் வரவேற்பு ஆதரவு தந்தனர்.
செந்தில் பாலாஜி நிருபர்களிடம் கூறுகையில், “திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. முதல்வர், துணை முதல்வர் கோவை வருகை எப்போது என தெரியாது. பிரச்சார பயணம் திட்டத்தில் தான் அது தெரியவரும்.
கோவை தெற்கு தொகுதியில் திமுகவிற்கு மக்கள் நல்ல வரவேற்பு தருகிறார்கள். தெற்கு தொகுதிக்கு என தனியாக எந்த திட்டமும் அறிவிக்கவில்லை. ஆனால் கோவையில் பல்வேறு திட்டங்களில் நிறைவேற்றும் போது தெற்கு தொகுதிக்கும் முக்கியத்துவம் தரப்படும்.
பிரச்சாரத்தின் போது மல்டி லெவல் கார் பார்க்கிங், சமுதாய கூடம் தேவை என கேட்டார்கள்,” என்றார்.
பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கோவை வடக்கு, தெற்கு தொகுதியில் பிரச்சாரத்தின் போது கரூர் வேட்பாளர்களின் பேட்டரி கழற்றப்படும் என விமர்சனம் செய்து பேசிய விவரம் குறித்து கேட்ட போது, “நான் 5 முறை தேர்தலில் நின்று ஜெயித்திருக்கிறேன்.
என்னை பற்றி சொல்லும் அந்த நபர் 2 முறை தேர்தலில் மக்களால் புறக்கணிக்கப்பட்டார். கட்சியாலும் அவர் புறக்கணிக்கப்பட்டு நிற்கிறார். அவரை பற்றி பேசினால் எனக்கு டைம் வேஸ்ட் ஆகி விடும். அவர் பீஸ் போன பல்பு. அதை ஏன் பேச வேண்டும். தேர்தலுக்கு பின்னர் பாத்துக்கலாம், ” என்றார்.
