கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பான ஓட்டுப் பதிவு…!

கோவை மாவட்டத்தில் 3540 வாக்குப்பதிவு மையங்களில் இன்று வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது.

மாவட்ட அளவில் 27.44 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். காலை 9 மணி நிலவரப்படி 18.15 சதவீதம் வாக்கு பதிவானது. 11 மணி நிலவரப்படி 38.62 சதவீதம் ஓட்டுகள் பதிவானது.கடந்த காலங்களை விட தற்போது அதிக அளவு வாக்கு பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் அமைதியாக எந்தவித பிரச்சனையும் இன்றி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. நகர் பகுதியில் காட்டிலும் கிராமப் பகுதி வாக்கு சாவடிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. வாக்காளர்களுக்கு உதவி செய்வதற்காக அனைத்து வாக்கு சாவடிகளிலும் ஹெல்த் டெஸ்க் அமைக்கப்பட்டு இருக்கிறது.

வயதானவர்கள் குறிப்பாக 75 வயது கடந்தவர்கள் வாக்கு சாவடிகளுக்கு செல்வதற்காக போக்குவரத்து கழகம் சார்பில் இலவச பயணத்திட்டம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இவர்கள் இலவசமாக பஸ்களில் பயணம் செய்து ஓட்டு போடலாம். மாலை ஆறு மணி வரை ஓட்டுப்பதிவு நடத்தப்படும். சரியாக ஆறு மணிக்கு ஓட்டு சாவடி வந்து சேர்ந்து விட்டால் கூட்டம் அதிகமாக இருந்தால் டோக்கன் கொடுத்து அவர்கள் ஓட்டு போட அனுமதிக்கப்படுவார்கள்.

இரண்டு மணி நேர வாக்குப்பதிவு கணக்கின்படி கோவை வடக்கு தொகுதியில் 16.84 சதவீதம் ஓட்டுகள் பதிவானது. கோவை தெற்கு தொகுதியில் 17.80 கவுண்டம்பாளையம் தொகுதியில் 20.26 கிணத்துக்கடவு தொகுதியில் 18.86 மேட்டுப்பாளையம் தொகுதியில் 18.12 பொள்ளாச்சியில் 18.45 சிங்காநல்லூரில் 18.35 சூலூரில் 19.26 தொண்டாமுத்தூரில் 18.40 வால்பாறையில் 16.14 சதவீதம் ஓட்டுகள் பதிவானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *