5 வருவாய் கிராமம், 4 பிர்க்கா ரெடி

கோவை மாவட்டத்தில் 3 கோட்டம், 11 தாலூகா, 295 வருவாய் கிராமங்கள் இருக்கிறது 11 பிளாக், 228 பஞ்சாயத்து ஒரு மாநகராட்சி, 3 நகராட்சி, 37 பேரூராட்சிகள் அமைந்துள்ளது. மாவட்டத்தின் பரப்பளவு 4723 சதுர கி.மீ. மக்கள் தொகை கடந்த 2011ம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி 34,58,045 ஆக இருக்கிறது. மாவட்டத்தின் வளர்ச்சி மற்றும் பணிகளை வேகமாக முடிக்கும் வகையில் வருவாய் கிராமங்கள் உள் வட்டங்களை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன் படி, கோவை மாவட்டத்தில் 5 வருவாய் குறு வட்டங்கள் (பிர்க்கா) மற்றும் 5 வருவாய் கிராமங்கள் புதிதாக உருவாக்க அனுமதி வழங்கப்பட்டது.

கோவை வடக்கு வட்டத்தில் உள்ள கணபதி உள்வட்டத்தினை பிரித்து சங்கனூர் புதிய வருவாய் உள்வட்டம்:

மற்றும் சங்கனூர் வருவாய் கிராமத்தினை பிரித்து புதிய சங்கனூர் மேற்கு மற்றும் எஞ்சிய சங்கனூர் கிராமத்தினை சங்கனூர் கிழக்கு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இதேபோல் மதுக்கரை வட்டம் குறிச்சி மற்றும் ஒத்தக்கால் மண்டபம் ஆகிய உள்வட்டத்தை சீரமைத்து புதிதாக வெள்ளலூர் வருவாய் உள்வட்டம், மேட்டுப்பாளையம் உள்வட்டத்தினை பிரித்து சிறுமுகை புதிய வருவாய் உள்வட்டம் மற்றும் சிக்கதாசம்பாளையம் வருவாய் கிராமத்தை சீரமைத்து சிக்கதாசம்பாளையம் டவுன் எனும் புதிய வருவாய் கிராமம் மற்றும் எஞ்சிய சிக்கதாசம்பாளையம் வருவாய் கிராமத்தினை சிக்கதாசம்பாளையம் ரூரல் என அமைக்கப்பட்டது.

சூலூர் உள்வட்டத்தினை பிரித்து இருகூர் புதிய வருவாய் உள்வட்டம், கருமத்தம்பட்டி உள்வட்டத்தினை பிரித்து நீலம்பூர் புதிய வருவாய் உள்வட்டம், கோவை வடக்கில் துடியலூர் மற்றும் சரவணம்பட்டி ஆகிய உள்வட்டத்தை சீரமைத்து புதிதாக கவுண்டம்பாளையம் வருவாய் உள்வட்டம் தெற்கு வட்டத்தில் சிங்காநல்லூர் மற்றும் கோவை டவுன் ஆகிய உள் வட்டங்களை சீரமைத்து புதிய ராமநாதபுரம் உள்வட்டம் மற்றும் கோவை டவுன் வருவாய் கிராமத்தை பிரித்து புதிய கோவை டவுன் மேற்கு மற்றும் புதிய கோவை ரூரல் என்ற வருவாய் கிராமங்கள் மற்றும் எஞ்சிய கோவை டவுன். இனி கோவை டவுன் கிழக்கு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இதன் மூலமாக வருவாய் கிராமங்களின் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்தது. புதிதாக உருவாக்கப்பட்ட வருவாய் கிராமங்கள், 4 பிர்க்கா பகுதிகளுக்கு தனி அலுவலகம் மற்றும் அதிகாரிகள் விரைவில் நியமனம் செய்யப்படவுள்ளது. பொதுமக்கள் தங்களது பகுதிக்கான நலத்திட்டங்கள், சேவைகள் பெற இந்த வருவாய் கிராமங்களை அணுகலாம் என வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *