Forest settlement: கோவை மலை கிராமங்களில் அட்டைப்பூச்சி கடி…
கோவை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்கிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள ஆனைகட்டி, சிறுவாணி அடிவாரத்தில் உள்ள ஜாகிர் பொரத்தி, சர்க்கார் பொரத்தி, வெள்ளப்பதி உள்ளிட்ட மலை கிராமங்களில் பூச்சி கடியால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பகுதியில் நீர் தேக்கம் உள்ள இடங்களில் அட்டை, சிறு வண்டு கடிப்பதாகவும், ஈச்சம் புல் வேந்த கூரை வீடுகளில் சிறு பூச்சிகள் அதிகமாக இருப்பதாக மலை கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இரவு நேரங்களில் பூச்சி கடி அதிகமாக இருப்பதால் மக்கள் வேப்பிலை அரைத்தும் சாணத்தை தெளித்தும் பூச்சி வராமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அட்டை பூச்சி, வண்டு கடி, அரிப்பு, ஆணிக்கால் நோய்களில் மலை கிராமத்தினர் அதிகளவு பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. நரம்பு பாதிப்பு, தரமற்ற குடிநீராலும் மலை கிராம மக்களுக்கு பாதிப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. நோயாளிகள் மீட்பு திட்டத்தில் மலை கிராம மக்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் செய்வதிலும் சுகாதார துறையினர் ஆர்வம் காட்டவில்லை.
பூச்சி கடி பிரச்னைகளை ஷெட்டில்மெண்ட் பகுதியில் தவிர்க்க முடியாது. வனத்திற்குள் பல்வேறு இடங்களுக்கு சென்று வருபவர்களுக்கு காலில் பல்வேறு பாதிப்பு இருக்கும். நீண்ட காலமாக இது தீர்க்க முடியாத பிரச்னையாக இருக்கிறது. சிலர் காலில் செருப்பு அணிவதில்லை. காலை அடிக்கடி சுத்தம் செய்யவேண்டும் என சுகாதார துறையினர் தெரிவித்தனர்.
