Gen z: கோவையில் ‘ஜென் சி’ இளம் தலைமுறையினர் சந்திப்பு…!
கோவையில் திமுக சார்பில் ஜென் இசட் என்ற இளைஞர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று இரவு நடந்தது.
இதில் இளம் தலைமுறை இளைஞர்கள் பலர் கலந்து கொண்டு அரசியல், நாட்டு நடப்பு விவரங்களை பகிர்ந்தனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்த நிலையில் இளைஞர்களை கவரும் முயற்சியில் திமுக தீவிரமாக இறங்கி உள்ளது.
பல்வேறு மாவட்டங்களில் திமுக சார்பில் இளைஞர் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கோவையில் சரவணம்பட்டி பகுதியில் திமுக சார்பில் இளைஞர் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பேச்சாளர்கள் அரசியல் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக அரசியல் வரலாறு, தற்போது உள்ள அரசியல் சூழல், அரசியலில் இளைஞர்களுக்கான முக்கியத்துவம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. போலும், பல்வேறு தலைப்புகள் வழங்கப்பட்டு அதில் இளைஞர்கள் உரையாற்றினர். கடந்த காலங்களில் இருந்த நல்ல திட்டங்களை மீறி இளம் வாக்காளர்கள் எந்த ஆவலில் ஓட்டு போட்டார்கள் என்பது குறித்து பேசினர்.
சோசியல் மீடியாக்களின் தாக்கம் தான் மாற்றத்தை ஏற்படுத்தியதா, இளம் தலைமுறையினருக்கு நிஜமான சூழல் நன்றாக தெரிந்துள்ளதா என்பதும் இதில் விவாதிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளைஞர்கள் கூறுகையில், இன்றைய இளம் தலைமுறையினர் அரசியல் தெரிந்து கொள்வது இன்றியமையாத தேவையாக உள்ளது.
இந்த சந்திப்பு மூலம் தமிழக அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டோம். பல விசயங்களை இன்னும் விவரமாக தெரிந்து கொள்ள வேண்டும் என ஆவல் ஏற்பட்டிருக்கிறது. வரும் காலங்களில் நமது உரிமைக்காக லஞ்சம் இல்லாத திட்டங்கள், அடிப்படை வசதிகளுக்கு அதிகமாக போராட வேண்டியிருக்கும் என்பது புரிகிறது.
தமிழ்நாட்டிற்கு கடந்த காலங்களில் கிடைக்கப்பெற்ற உரிமைகள் குறித்து தெரிந்து கொண்டோம். இன்னும் இளைஞர்களுக்கு தேவையான விசயங்கள் என்ன என்பது குறித்தும் விவாதம் செய்தோம். மேலும் பல கூட்டங்களை நடத்தி அதிக நபர்களுக்கு கருத்து பகிர்ந்தால் தான் கூடுதல் தகவல்கள் கிடைக்கும்.
சோசியல் மீடியா விவாதத்திற்கும் நேரிடையான கருத்து பகிர்வுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது. நேரில் உண்மையாக, நியாயமான விசயங்களை அன்பாக சொல்கிறார்கள் என்றனர். தொடர்ச்சியாக இது போன்ற சந்திப்புகளை நடத்த வேண்டும், ” என்றனர்.
