கோவை மாநகராட்சியில் கொசு மருந்து தெளிப்பு பணி பாதிப்பு…அபேட், பைரித்திரம் எங்கே போச்சு..

ரேஸ் கோர்ஸ் பூச்சியியல் பிரிவில் காட்சி பொருளாய் மருந்துகள்…

கோவை மாநகராட்சியில் தென்மேற்கு, வடகிழக்கு பருவ மழை காலங்களை முன்னிட்டு டெங்கு, காலரா, டைபாய்டு தடுப்பு பணி என்ற பெயரில் நோய் கிருமி அழிப்பு பணிக்கான வேதிப்பொருட்களை கொள்முதல் செய்து வருகின்றனர்

. கடந்த ஆண்டில் மண்டல அளவில், 30 முதல் 40 லட்ச ரூபாய் அளவிற்கு கொசு அழிப்பு மருந்துகளான அப்ட்ே, பைரித்திரம் மற்றும் பிளீச்சிங் பவுடர்கள் வாங்கப்பட்டது.5 மண்டலங்களில் சுமார் 2 கோடி ரூபாய் அளவிற்கு மருந்து வாங்கி அதை நீண்ட காலமாக பயன்படுத்தவில்லை.

தற்போது தென் மேற்கு பருவ மழை துவங்கும் நேரத்தில் கொசு மருந்து தெளிக்க உத்தரவு வழங்கப்பட்டது. கொசு முட்டையிட்டால் அதன் லார்வாக்கள் ஒரு வாரத்தில் பெரிதாகி விடும். மாநகராட்சி பகுதிகளில் கொசுக்களின் பெருக்கம் (மஸ்கிடேட்டா டென்சிட்டி) அதிகமாக இருப்பது மண்டல பூச்சியியல் துறையின் சர்வேயில் தெரியவந்தது.

ஆனால் இங்கே கொசு மருந்து தெளிக்கப்படவில்லை. பல மாதங்களாக கொசு மருந்துகளை பதுக்கி வைத்து பயன்படுத்தாமல் அடுத்த பருவ மழை சீசனுக்காக கொஞ்சமாக பெயரளவிற்கு எடுத்து பயன்படுத்தி வருகிறார்கள். மருந்து கொள்முதல் மருந்து தெளிப்பு பணிகளில் வெளிப்படை தன்மை கிடையாது.

கொசுக்களை அழிப்பது லார்வா நிலைக்கு முன் கட்டுப்படுத்துவது, டயர் டியூப், தேங்காய் தொட்டி பிளாஸ்டிக் பொருட்களை அகற்றுவது பெயரளவிற்கு கூட நடக்கவில்லை. கொசு மருந்து தெளிப்பு பணியாளர்களை பல மாதங்களாக வேறு பணிகளுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். கோவை மாநகராட்சி நிர்வாகம் நோய் பரவல் தடுக்க நிஜமான நடவடிக்கை இறங்க வேண்டும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *