7th finance commission: கோவை ஊராட்சிகளில் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 7th finance committee (7வது நிதிக்குழு கமிஷன்) அதிகாரிகள் நாளை கோவை மாவட்டத்தில் ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் திட்ட பணிகள் நடக்கவில்லை என புகார் எழுந்துள்ளது. நிதி இல்லாமல் பெரும்பாலான பணிகள் முடங்கி போய் கிடப்பதாக தெரிகிறது. மாவட்ட அளவில் ஒவ்வொரு ஊராட்சியிலும் எவ்வளவு நிதி இருக்கிறது. எவ்வளவு வருவாய் பெறப்பட்டது,

கடந்த காலங்களின் வரவு செலவு அறிக்கை விவரங்களையும் திட்ட பணிகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்யவுள்ளனர். ஊராட்சிகளில் செய்த பணிகள், செய்யாத பணிகள், பெயரளவிற்கு கணக்கு காட்டிய பணிகள், தரம் குறைவான பணிகள் என துல்லியமாக ஆய்வு செய்யவுள்ளனர்.

இதில், ஊராட்சிகளின் செயல்பாடு, ஊரக வளர்ச்சி முகமை, வட்டார வளர்ச்சி அலுவலகங்களின் பணிகள் ஆய்வு செய்து விசாரணை நடத்தப்படும்.

கோவை மாவட்டத்தில் ஒன்றிய அரசின் திட்டங்களின் மூலமாக செய்யப்பட்ட பணிகள், பெறப்பட்ட நிதி, செலவிடப்பட்ட தொகை, பயனாளிகள் விவரங்கள் ஆய்வு செய்யப்படும். பயனாளிகள் உண்மையானவர்களா, போலியான நபர்கள் இருக்கிறார்களா எனவும் ஆய்வு செய்யவுள்ளனர். இந்த விசாரணையில் மாவட்ட அளவில் நடந்த பல்வேறு முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *