‘ உத்தரவு மகாராசா’ தகவல் அனுப்பிய ஓலைச்சுவடி..!
திருக்குறள், அகநானூறு, புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை உட்பட பல நூல்கள் எழுதப்பட்ட து ஓலைகளில் தான். பழங்காலத்தில் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட பல நூல்கள் கால போக்கில் அழிந்து விட்டதாக தெரிகிறது. மன்னர்களின் உத்தரவுகள் ஓலை மூலமாக மக்களுக்கு தெரிவிக்கப்பட்டு வந்தது.
வரி, சுங்கம் தொடர்பான உத்தரவுகள் ஓலைச்சுவடிகளில் பொது இடங்களில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. நீட்டல் ஓலை மணவோலை குடவோலை, இறப்போலை உட்பட பல்வேறு வகையான ஓலைகள் பயன்பாட்டில் இருந்தது. திருமணத்திற்கு பெண் பார்த்து உறுதி செய்வதற்காக மணவோலை வழங்கப்பட்டது. குடும்பம். பூர்வீகம் திருமண பந்த விவரங்கள் இந்த ஓலையில் குறிப்பிடப்பட்டது. கோயில் சொத்து. பயன்பாட்டில் உள்ள நிலங்கள் குறித்த விவரங்களும் ஓலை சுவடி தகவல்கள் மூலமாக அறியப்படுகிறது.
குகை பாறை செய்திகளின் அடுத்த நிலையே ஓலைச்சுவடி .ஒலைச்சுவடி புழக்கம் அதிகமான பின்னர் பாறை, கல்வெட்டு தகவல்கள் குறைந்து விட்டதாக தெரிகிறது. இதிகாசங்கள் பழங்கால நூல்கள் எழுத பனை ஓலைகள் பயன்படுத்தப்பட்டது. ஒரு விரல் கிடை இரு விரல் கிடை அளவுகள் பனை ஓலைகளில் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் இட பற்றாக்குறையால் பெரும்பாலான ஓலைச்சுவடிகளில் இடவெளி இன்றி எழுதப்பட்டதாக தெரியவந்தது . ஓலைச்சுவடிகளில் புள்ளி வைக்கும் வழக்கம் கிடையாது ஓலை கிழிந்து வீணாகி விடும் நிலை காரணம் புள்ளி வைப்பது தவிர்க்கப்பட்டது.
படிப்பவர்கள் வாக்கியத்தை வைத்து அர்த்தம் தெரிந்து கொள்ளவேண்டிய நிலையிருந்தது. கடந்த காலங்களில் ஒட்டெழுத்துக்கள் அதிகளவு பயன்படுத்தப்பட்டது. மழை வெயிலில் சுவடிகள் அழிந்து போகாமல் தடுக்க பாதுகாப்பதில் சிக்கல் ஏற்பட்டது. கொங்கு மண்டலத்தில் கோயில் மூலச்சுவடிகளுக்கு மெழுகு பூச்சி தடவி பாதுகாத்து வந்தனர். ஆனாலும் பனை இலைகளை 10 ஆண்டுகள் கடந்து கல்வெட்டுகளில் சில ஓலைச்சுவடிகள் தொடர்பான குறிப்புகள்’ இருக்கிறது.
ஆனால் கல்வெட்டிகளில் கிடைத்த குறிப்புகளின் படி தொல்லியல் துறையினர் தேடுதல் பணி நடத்தியபோது ஓலைச்சுவடிகள் கிடைக்கவில்லை .மூதாதையர்களின் நினைவாக சிலர் ஓலைச்சுவடிகளை பாதுகாத்து வருகின்றனர். ஓலைச்சுவடி காலத்திற்கு பின்னர் இதிகாசம் இலக்கிய ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட தகவல்களை தெரிந்து படைப்புகள் அரிதாகி விட்டது. கடந்த கால ஓலைச்சுவடிகள் தொல்லியல் துறை காப்பகங்களில் மட்டுமே காணும் நிலையிருக்கிறது.
