அப்பார்ட்மெண்டில் வீடு வாங்கித் தருவதாக மோசடி…

சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா, பழனியாபுரியை சேர்ந்தவர் பாஸ்கர் (19). இவரிடம் சிங்காநல்லூரை சேர்ந்த ஜெகநாதன் மற்றும் அவரது கூட்டாளிகள் அப்பார்ட்மெண்ட்டில் குறைந்த விலையில் வீடு வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

இதனை நம்பிய பாஸ்கர், 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் பல தவணைகளாக வங்கிக் கணக்கு மூலமாக மொத்தம் ரூ.11 லட்சத்து 77 ஆயிரத்து 500 கொடுத்துள்ளார்.ஆனால் பணம் கொடுத்து சுமார் 9 ஆண்டுகள் கடந்தும், அவர்கள் வீடு வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் அலைக்கழித்து வந்துள்ளனர். பணத்தை திருப்பிக் கேட்டபோது பாஸ்கரையும், அவரது குடும்பத்தினரையும் ஜெகநாதன் மற்றும் அரவது கூட்டாளிகள் கண்ணன் ரமேஷ் ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதேபோல, கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்த முகமது ஜாபர் அலி என்பவரிடம் அப்பார்ட்மெண்ட்டில் குறைந்த விலையில் வீடு வாங்கித் தருவதாகக் கூறி ஜெகநாதன் மற்றும் அவரது நண்பர் நவீன்குமார் பல்வேறு தவணைகளாக ரூ.17 லட்சம் மோசடி செய்துள்ளனர். அதனை தொடர்ந்து கோவை இடையார்பாளையத்தைச் சேர்ந்த ராதிகா சேத்தன் என்பவரிடம் ரூ.9 லட்சம் பெற்று ஏமாற்றியுள்ளனர்.

பணத்தை திருப்பிக் கேட்டபோது தொலைபேசியில் மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும், கோவை இருகூர் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் (42) என்பவரிடம் அப்பார்ட்மெண்ட்டில் வீடு வாங்கித் தருவதாக ரூ.10 லட்சத்து 89 ஆயிரத்து 590 மோசடி செய்துள்ளனர். இதுதவிர, சென்னையைச் சேர்ந்த ரகுராமிடம் ரூ.10 லட்சம், பழனிக்குமாரிடம் ரூ.8 லட்சம், கஜா விஜயிடம் ரூ.10 லட்சம், ராதிகா ஜெகனிடம் ரூ.5 லட்சம் எனப் பலரிடமும் லட்சக்கணக்கில் கைவரிசை காட்டியுள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சில நாட்களுக்கு முன்பு புகார் மனு அளித்தனர்.அதன் பேரில் சிங்காநல்லூர் போலீசார் மோசடியில் ஈடுபட்ட ஜெகநாதன். சேலம் மாவட்டம் எடப்பாடி தொண்டம்பட்டியைச் சேர்ந்த கண்ணன், கோவை சிங்காநல்லூர் வேலன் நகரைச் சேர்ந்த நவீன், பல்லடம் லட்சுமி மில் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

One thought on “அப்பார்ட்மெண்டில் வீடு வாங்கித் தருவதாக மோசடி…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *