வித்தியாசமா கேள்வி கேக்குறீங்க… அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கேலி

தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் விமானம் மூலம் கோவை வந்தார்.

முன்னதாக கோவை விமான நிலையத்தில் ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கல பதக்கம் வென்று தாயகம் திரும்பிய கோவையைச் சேர்ந்த வித்யா ராமராஜுக்கு பொன்னாடை அணிவித்தும் பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் அவர் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தார். அப்போது அங்கிருந்த நிருபர்கள் அவரை சுற்றிவளைத்து கேள்விகள் கேட்டனர்.

அப்போது நிருபர்கள், அவரிடம் முதல்வர் ஜோசப் விஜய் தாராபுரம் தொகுதியில் இரண்டு முறை பிரசாரம் செய்வது தோல்வி பயத்தின் காரணமாகவே என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனரே என்று கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர், மக்களை சந்திக்க வேண்டாம் என்று கூறுகிறீர்களா? எனவும் என்ன வித்தியாசமாய் கேள்வி எழுப்புகிறீர்கள்? எனவும் பதில் கேள்வி எழுப்பியபடி வேகமாக சென்றார். இதற்கு முன்பு 2 முறை கோவை வந்த அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் நிருபர்களை பார்த்ததும் ஓட்டம் பிடித்தது. குறிப்பிடத்தக்கது.

3 thoughts on “வித்தியாசமா கேள்வி கேக்குறீங்க… அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கேலி”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *