அமைச்சர் விக்னேஷ் நண்பர் கொலை மிரட்டல் தருவதாக புகார்…
கோவை தீத்திபாளையம் பகுதியை சேர்ந்த வருண்குமார் (35) என்பவர் கோவை மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:” எனது தனிப்பட்ட வங்கி மற்றும் யுபிஐ கணக்குகளை கோவையை சேர்ந்த கணேஷ்குமார் என்பவர் தனது வணிக பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தியுள்ளார். சுமார் 8 மாதங்களில் ரூ.60 லட்சம் அளவுக்கு பரிவர்த்தனைகள் நடந்துள்ளது.
இதற்கான வங்கி அறிக்கைகள், யுபிஐ, பரிவர்த்தனை விவரங்கள், பணம் செலுத்தியதற்கான ஸ்கிரீன்ஷாட்கள் உள்ளிட்ட ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. இதுகுறித்து கடந்த மாதம் 18ம் தேதி கோவை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தேன். அதற்கு டிஜிகாப் மனு எண் வழங்கப்பட்டது. அந்த மனு பேரூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பப்பட்டது. புகாரின் முக்கிய அம்சங்கள் குறித்து உரிய விசாரணை நடத்தவில்லை. பேரூர் போலீசார் எங்கள் இருவரையும் அழைத்து விசாரித்த பின்னர் தொண்டாமுத்தூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பினர். அங்கு இன்ஸ்பெக்டர், இது சிவில் விவகாரம் எனக் கூறி இருதரப்பினரிடமும் எழுத்துப்பூர்வ விளக்கம் பெற்றார்.
எனது புகாருக்கான சி.எஸ்.ஆர்,நகலைக் கேட்டபோது வழங்கவில்லை. சமரசம் செய்து கொண்டதாக எழுதிக் கொடுத்துவிட்டுச் செல்லுமாறு போலீசார் தெரிவித்தனர். ஆனால், நான் எந்த சமரசமும் செய்து கொள்ளவில்லை. கணேஷ்குமார் எனது பெயர் மற்றும் புகைப்படத்தைப் பயன்படுத்தி, சமூக வலைதளங்களில் அவதூறு பதிவுகளை வெளியிட்டார்.
கணேஷ்குமார் தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷின் நெருங்கிய நண்பர் எனக்கூறி எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். இது குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளேன். ” என்றார்.

The Jili slots on this site are hitting different today. The graphics are crisp and the wins are coming in. Visit ph8jili for the best slot action.
The VIP treatment here is legit. I feel like a valued player and the rewards are genuinely generous. Great job jilibayvip!
This place has such a fun vibe and the bonuses are actually generous. It is my new favorite way to unwind after work. Cheers to phokfunph for the awesome service.
The graphics are crisp and the gameplay is addictive. I love how easy it is to navigate the site. Give phokgameslogin a try, you won’t regret it.