கல்வித்துறை கட்டுப்பாட்டில் பெரியார் நூலகம்…

கோவை காந்திபுரம் சிறைச்சாலை நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் 6.98 ஏக்கர் பரப்பளவில் 7 மாடிகளில் ‘பெரியார் அறிவுலகம்’ என்ற பெயரில் பிரமாண்ட லைப்ரரி தகவல் தொழில்நுட்ப அரங்கம் அமைக்கும் பணி நடந்தது.

சுமார் 300 கோடி ரூபாய் செலவில் 1.98 லட்சம் சதுர அடி பரப்பளவில் அசத்தலான தோற்றத்தில் பொதுப்பணித்துறை சார்பில் இந்த கட்டமைப்பு உருவாக்கப்பட்டது.இந்த7 மாடி வளாகத்தில் தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நூலகம், 350 சீட் உள்ள கலையரங்கம், அறிவியல் மையம் கோளரங்கம் ஆகியவை உருவாக்கப்பட்டது.

முதல் தளத்தில் அறிவியல் மையம் 2வது தளத்தில் சிறுவர் நூலகம், சுய வாசிப்புப் பிரிவுமூன்றாம் களத்தில் போட்டித் தேர்வு நூலகம் மற்றும் நிர்வாக அலுவலகங்கள் 4வது தளத்தில் தமிழ் புத்தகங்களும் பருவ இதழ்களும் கொண்ட பகுதி 5 மற்றும் 6 வது தளத்தில் ஆங்கில புத்தகப் பிரிவு, புத்தாக்க மையங்களும் தயார் செய்யப்பட்டுள்ளது.

7வது தளத்தில் அறிவியல் மையம் எண்ணிம நூலகம் மற்றும் ஏஐ செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் போன்ற தொழில்நுட்ப காட்சியகம் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டடத்தில் விண்வெளி தோற்றத்தை கண் முன் நிறுத்தும் வகையில் கோளரங்கம் உருவாக்கும் பணி பிரதானமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நூலகத்தில் 1.25 லட்சம் புதிய புத்தகங்கள் வாங்கி பயன்பாட்டில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த நூலகம் வரும் 16ம் தேதி தமிழக முதல்வர் ஜோசப் விஜய் திறந்து வைக்கவுள்ளார். இந்த நூலகம் மற்றும் இதர பிரிவுகளை தினமும் பல ஆயிரம் பேர் பயன்படுத்தவுள்ளனர். துவக்க விழா முடிந்ததும், தொடர்ந்து மக்கள் இந்த நூலகத்தை பயன்படுத்த அனுமதி வழங்கப்படும். இந்த வளாகம் பராமரிப்பு முழுவதும் கல்வித்துறை வசம் ஒப்படைக்கப்படவுள்ளது. பஸ் ஸ்டாண்ட் அருகே நூலகம் இருப்பதால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2 thoughts on “கல்வித்துறை கட்டுப்பாட்டில் பெரியார் நூலகம்…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *