உப்பிலிபாளையம் மேம்பாலம் ரூ.16 கோடியில் பெருசாகுது

கோவை மில் ரோடு, புருக்பாண்ட் ரோடு, நஞ்சப்பாரோடு , கூட் செட் ரோடு சந்திக்கும் உப்பிலிபாளையம் மேம்பாலம் 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. புவியியல் தகவல் அடிப்படையில் இந்த மேம்பாலம் கட்டப்படவில்லை. மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பள்ளமாக இருப்பதால் மழை காலங்களில் குளம் போல் நீர் தேங்கி விடுகிறது.

மேலும் இந்த மேம்பாலத்தில் இட நெருக்கடி இருக்கிறது. சமீப காலமாக பிரச்சினை அதிகமானதால் இதனை 16 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கம் செய்து கட்ட தேசிய நெடுஞ்சாலை துறை திட்டமிட்டு இருக்கிறது. இதற்கான அனுமதி ஒரு வாரத்தில் கிடைத்துவிடும். டெண்டர் விட்டு பணிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மேம்பாலத்தின் உள் வளைவு பகுதிகள் 16 மீட்டர் வரை அகலமாக்கப்படும்.

இதிலிருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் ஜிடிநாயுடு மேம்பாலம் துவங்குகிறது .எனவே அவிநாசி ரோடு சந்திப்போம் மேம்பாலம் விரிவாக்கம் செய்யப்பட்டால் போக்குவரத்து நெரிசல் குறையும் என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *