தண்ணீர் வாய்க்காலில் தனியாக சுற்றிய யானை..!
கோவை நரசிபுரம் ஓடை பகுதியில் இன்று யானை ஒன்று சுற்றிக் கொண்டிருந்தது. தண்ணீர் குடித்த பின்னர் யானை காட்டுக்குள் செல்லாமல் அந்தப் பகுதியில் ஓடை சீரமைப்பு பணியில் இருந்த ஜேசிபி முன்பு நின்று பிளிறியது. அங்கே இருந்தவர்கள் யானையைப் பார்த்து தப்பித்து ஓடினர். யானை தனியாக சுற்றிக் கொண்டிருந்த காட்சியை அந்த பகுதியில் இருந்தவர்கள் வீடியோ பதிவு செய்தனர். இந்த வீடியோ பதிவு பல்வேறு வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக ஜீரணத்தம் அன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் யானை நடமாட்டம் அதிகமாகி வருகிறது. தற்போது நரசிபுரம் பகுதியில் ஒற்றை யாணை சுற்றுவதால் அந்தப் பகுதி மக்களுக்கு அலாட் உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது.
