யானை வருது கம்பி வேலி போடுங்க…


தமிழக விவசாயிகள் சங்க கூட்டம் கோவை ஆறுமுக கவுண்டனூரில் இன்று நடந்தது. இதற்கு சங்கத் தலைவர் கந்தசாமி உட்பட கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் யானைகள் வனத்தை விட்டு வெளியே வந்து விவசாய பயிர்களை சேதம் செய்கின்றன. யானையில் வருகையை தடுக்க கம்பி வேலி அமைக்க வேண்டும். விவசாயிகள் தங்களது விலை நிலங்களில் சோலார் மின் வேலி அமைத்துள்ளனர். இந்த நிலையில் வனத்துறை அனுமதி பெற்ற நிறுவனங்கள் மூலமாக சோலார் மின் வேலி அமைக்க வேண்டும் என உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த உத்தரவால் விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தில் தொழிலாளர்களுக்கு பணி வழங்கப்படுகிறது. இதற்கு பெரும்பாலான தொழிலாளர்கள் சென்று வருகிறார்கள். தோட்டத்தில் விவசாயக் கூலி வேலை செய்ய ஆட்கள் பற்றாக்குறை இருக்கிறது. எனவே தமிழக அரசு இது தொடர்பாக ஒரு நல்ல முடிவை எடுத்து செயல்படுத்த வேண்டும் என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
