K. V

ரேக்ளா வண்டியில் ஐஜி, எஸ்.பி ரவுண்ட்ஸ்

கோவை ஆயுதப்படை மைதானத்தில் போலீஸ் சார்பில் பொங்கல் விழா நேற்று நடந்தது . இதில் தமிழக மேற்கு மண்டல போலீஸ் ஐஜி சரவண சுந்தர், கோவை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். கயிறு இழுக்கும் போட்டி , உறி அடிக்கும் போட்டி, மாட்டுவண்டி பயணம் என விழா அமர்க்கள படுத்தப்பட்டது. போலீஸ் அதிகாரிகள் காளை மாட்டு வாகனங்களில் ஏறி மைதானத்தில் வலம் வந்தனர். பொங்கல் வைத்து குடும்பத்தினருடன் கொண்டாடினர். இதில் ஏராளமான போலீசார்…

Read More

உணவு வேணாம் ஊதியம் வேணும்…கோவை மாநகராட்சி தொழிலாளர்கள் போராட்டம்..

கோவை மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு பகுதிகளில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்கள் இன்று காலை மாநகராட்சி சார்பில் தினமும் வழங்கப்படும் காலை உணவு வாங்க மறுத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர் . அப்போது அவர்கள் கூறுகையில்,” எங்களுக்கு ஊதியம் முறையாக வழங்க வேண்டும். உணவை கொடுத்து வேலை செய்யுங்கள் என சொன்னால் அதை நாங்கள் ஏற்க மாட்டோம் . நீங்கள் முறையான ஊதியம் கொடுத்தால் நாங்கள் வாழ முடியும். எங்கள் குடும்பம் வாழ முடியும் . வெறும்…

Read More

இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்ய உத்தரவு

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்த பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் இன்று நடந்தது. இதில் தேர்தல் பார்வையாளர் குல்தீப் நாராயண் கலந்து கொண்டு கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் தொடர்பான விபரங்களை கேட்டார். முகவரி மாறியவர்கள் நீக்கப்பட்டவர்கள் தொடர்பான புகார்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என விசாரித்தார். வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகளை சரி செய்து விரைவில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் வகையில் பணிகளை மேற்கொள்ள…

Read More

ஆர்டிஒ பைன் என ரூ16 லட்சம் மோசடி ; குஜராத் கும்பல் கைது

கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த சாமுவேல் சந்திரபோஸ் (71) என்பவருக்கு கடந்த 8.09.2025 தேதி ஆர் டி ஒ அபராதம் செலுத்துவது போல ஒரு அப்ளிகேசன் அவரது வாட்ஸ்ஆப்பில் வந்துள்ளது. அவர் தனது வாகனத்திற்கு பைன் ஏதும் வந்துள்ளதா என அறியவேண்டி மேற்படி ஆப்பை இன்ஸ்டால் செய்துள்ளார். அப்போது உடனே அவரது மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டு தொடர்ந்து அவரது மொபைலை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பின்னர், அடுத்தநாள், அவரது மொபைல் எண்ணிற்கு தொடர்ந்து OTP…

Read More

வெள்ளிங்கிரி மலை ஏற அனுமதி எப்போது..?!

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் வெள்ளிங்கிரி மலை கோயில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 1840 மீட்டர் உயரத்தில் 7 வது மலையின் மீது வெள்ளிங்கிரி குகை கோயில் அமைக்கப்பட்டுள்ளது. 8 மணி நேரம் மலையேறி கிரி மலை தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் குவிவது வழக்கம். குறிப்பாக சித்ரா பவுர்ணமி நாளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்வார்கள். தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இந்த கோயிலில் மலை…

Read More

தேர்தல் வரப்போகுது… கல்யாண மண்டபம் புக்கிங் குறையுது

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் பிப்ரவரி மாத இறுதி அல்லது மார்ச் இரண்டாம் வாரத்திற்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது . தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் அன்றைய தினத்திலிருந்து தேர்தல் நடத்தை விதிகள் செயல்பாட்டுக்கு வந்துவிடும். அப்போதில் இருந்து தேர்தல் கமிஷன் நிர்ணயித்த தொகை மட்டுமே கொண்டு செல்ல அனுமதி வழங்கப்படும் . குறிப்பாக 50 ஆயிரம் ரூபாய் குறைவாக மட்டுமே பணம் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படும். அதற்கு மேல் பணம் வைத்திருந்தால் ஆதாரம் காட்ட வேண்டும்….

Read More

தேர்தல் பேரணிக்காக மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்காக அனைவரும் ஓட்டு போட வேண்டும் என்பதை வலியுறுத்தும் பேரணி இன்று நடத்தப்பட்டது. இந்த பேரணியை துவக்கி வைக்க கோவை மாவட்டத்துக்கான தேர்தல் பார்வையாளர் குல்தீப் நாராயண் வருவார் என தெரிவிக்கப்பட்டது. இதற்காக கோவை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பல வாகனங்களுடன் காலை முதலே காத்திருந்தனர். ஆனால் அதிகாரி பல மணி நேரம் தாமதமாக மதியத்திற்கு பிறகு வந்தார். ஏன் காத்திருக்க வைக்கிறீர்கள் என மாற்றுத்திறனாளிகள் அதிருப்தி தெரிவித்தனர். நடத்திட்ட…

Read More

என்ன ஹிந்தில பேசுறாரு.. புரியாமல் தவித்த பாஜக தொண்டர்கள் ‌. ‌..

கோவைபா.ஜனதா சிங்காநல்லூர் தொகுதி பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் சிங்காநல்லூரில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். அப்போது அவர் பா.ஜனதாவில் மட்டுமே பூத் கமிட்டி உறுப்பினர் கூட கட்சியின் தலைவராக முடியும். இங்கே பூத் கமிட்டி சக்தி கேந்திரா மண்டல் தலைவர் மாவட்ட தலைவர் மாநில…

Read More

தண்ணி வரலை.. ஓட்டு போட மாட்டோம்..

தேர்தல் புறக்கணிப்பு தமிழக அரசே! தங்கள் ஆட்சியின் கீழ் உள்ள கோவை மாவட்டம் சூலூர் தாலுகா பட்டணம் ஊராட்சி மக்கள் குடிதண்ணீர் இன்றி நா வரண்டு கிடக்கின்றோம். நாதியற்ற மக்களை காப்பாற்ற வாருங்கள். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தற்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப தர மறுக்கும் குடிதண்ணீரை உடனே பேச்சுவார்த்தை நடத்தி பெற்றுத் தாருங்கள். உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் நாங்கள் நன்றியோடு இருப்போம். ஜனநாயகத்தின் முக்கியம் தேர்தல் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். தேர்தலை விட…

Read More

26 டன் சோபா மெத்தை குப்பை..

கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள நூறு வார்டுகளில் ரோட்டோரம் மற்றும் பொது இடங்களில் சோபா மெத்தை மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் குவிந்து கிடப்பதாக புகார் வந்தது. இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்தினர் இன்று லாரி மூலமாக பயன்பாட்டின்றி கிடந்த பொருட்களை சேகரித்தனர். 5 மண்டலங்களிலும் 26. 22 டன் அளவிற்கு மெத்தை தலையணை சோபா சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.

Read More