கோவை அப்பார்ட்மெண்ட் மூதாட்டி கொலையில் 2 பேர் கைது

கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள ஒரு பிரபல அப்பார்ட்மெண்டில் மூதாட்டி ஒருவரின் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்தது . இது தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அப்போது அந்த வீட்டில் ஆயுர்வேத டாக்டர் ராம்குமார் குட்டி என்பவரின் தாய் கஸ்தூரி (80) கை கால் கயிறால் கட்டி போட்ட நிலையில் இறந்து கிடந்தார் . அவரது கழுத்து பகுதியில் காயம் இருந்தது . வாயில் துணி வைத்து அடைத்து இருந்தனர்.இது தொடர்பாக…

Read More

கோவையில் ஓட்டுக்கு பணம்: தேர்தல் செயலியில் புகார் பெற பயிற்சி

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் ஆணையத்தின் மூலமாக இஎஸ்எம்எஸ், சுவிதா, சி விஜில் இசிஐ நெட் வோட்டார் போன்ற செயலிகள் பயன்படுத்தும் முறை தொடர்பாக தேர்தல் அலுவலர்களுக்கு இன்று கோவை கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி தரப்பட்டது. இதில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தொழில் நுட்ப பிரிவினர் , தேர்தல் பிரிவு நேர்முக உதவியாளர் மகேஸ்வரி தாசில்தார் தணிகைவேல் உள்பட பலர் பங்கேற்றனர். இந்த செயலிகள் மூலமாக பொதுமக்களிடம் இருந்து பல்வேறு…

Read More

கோவையில் துணை ராணுவ படை கொடி அணிவகுப்பு..!

கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் ஏற்பாடு நடக்கிறது. தேர்தல் பணிக்காக துணை ராணுவ படையான சிஆர்பிஎப் வீரர்கள் வெளி மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்டனர். இவர்கள் வெள்ளலூரில் சிஆர்பிஎப் வளாகத்தில் தங்கியுள்ளனர். நேற்று துணை ராணுவ படையினர் 144 பேர் தேர்தலுக்கான கொடி அணிவகுப்பில் பங்கேற்றனர். இந்த அணிவகுப்பு சுந்தராபுரம் சங்கம் வீதியில் துவங்கி சாரதா மில் ரோடு, போத்தனூர் போலீஸ் ஸ்டேஷன் வரை 2.7 கி.மீ தூரம் நடந்தது. இதில் மாநகர போலீஸ் துணை கமிஷனர் தேவநாதன்,…

Read More

கோவை வெள்ளிங்கிரி மலையில் 5 ஆண்டில் 40 பேர் சாவு..!

தென்கைலாயம் என அழைக்கப்படும் கோவை பூண்டி வெள்ளியங்கிரி மலை மலையேற்றத்திற்கு பிரசித்தி பெற்றது. ஆண்டுக்கு வரும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை சுமார் 5 லட்சம் பேர் மலை ஏறி சாமி தரிசனம் செய்வது வழக்கம். ஏழுமலைகளை ஏறி கிரி மலையை அடைய வேண்டும். மலை ஏறி இறங்க சுமார் எட்டு மணி நேரம் தேவைப்படும். நல்ல உடல் ஆரோக்கியம் உள்ள நபர்கள் மட்டுமே தடையின்றி மலை ஏற முடியும். ஆனால் போதுமான உடல் திறன்…

Read More

கோவையில் ஜிடி நாயுடு சிலை திறந்தார் தமிழக முதல்வர்..!

தமிழ்நாட்டின் புகழ்சால் பெருந்தகையாளர்கள், தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு தமிழ்நாட்டிற்குப் பெருமைத் தேடித்தந்த அறிஞர் பெருமக்கள், சமூகநீதி, விடுதலை உணர்வுகளை ஊட்டிவளர்த்த கவிஞர்கள், இசை மேதைகள், தமிழ்நாட்டின் தியாக வரலாற்றுக்கு உன்னத சாட்சியங்களாக விளங்கும் தியாகிகள், மேதைகள் மற்றும் அறிஞர்களின் நினைவுகளைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையிலும், தமிழ் சமுதாயத்திற்கு அவர்களின் பங்களிப்பை பெருமைப்படுத்தும் வகையிலும், நினைவகங்கள், திருவுருவச் சிலைகள், அரங்கங்கள், நினைவுத் தூண்கள். நினைவுச் சின்னங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த வகையில் இயந்திரவியல் மற்றும்…

Read More

கோவையில் ரேஷன் கடைகளில் மோடி படம்: தடையை மீறி போராடிய 49 பாஜகவினர் கைது..!

தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது . மோடி அரசு மூலமாக ரேஷன் கடைகளுக்கு மாதம் இரண்டு லட்சம் டன் ரேஷன் அரிசி மற்றும் கோதுமை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த விவரங்களை மறைத்து தமிழக அரசு தானே ரேஷன் பொருட்களை வழங்குவது போல் காட்டிக் கொண்டிருக்கிறது. அன்ன யோஜனா திட்டத்தை மத்திய அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. எனவே மத்திய அரசின் திட்டங்களை மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் ரேஷன் கடைகளில் பிரதமர்…

Read More

கோவையில் 44 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்.. பல்லி உணவு குறித்து விசாரணை..!

கோவை கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இன்று மதிய உணவு வழங்கப்பட்து. அப்போது, உணவில் பல்லி கிடப்பதாக தெரியவந்தது. இந்த உணவை சாப்பிட்ட 31 மாணவர்கள், 13 மாணவிகள் என 44 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக மாணவர்களை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கே மாணவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து, மாணவர்கள் அனைவரும் உடல் நலமுடன் இருப்பதாகவும் குணமாகியவுடன்…

Read More

300 அணிகளுக்கு ‘கிரிக்கெட் கிட் பேக்’ வழங்கினார் இன்ஜினியர் சந்திரசேகர்..!

கோவை மாவட்டத்தில் அதிமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா, புரட்சித் தமிழர் எடப்பாடியார் பிறந்த நாளை முன்னிட்டு முப்பெரும் விழாவாக அதிமுகவினர் கொண்டாடினர். வடவள்ளி பகுதியில் நடந்த விழாவில் எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் இன்ஜினியர் சந்திரசேகர் 300 கிரிக்கெட் அணிகளுக்கு 300 கிரிக்கெட் கிட் பேக் வழங்கினார். இதைப் பெற்றுக் கொண்ட கிரிக்கெட் அணி வீரர்கள் சந்திரசேகருக்கு நன்றி தெரிவித்தனர். இன்ஜினியர்…

Read More

கோவை கணுவாய் டாஸ்மாக் பாரில் புகுந்த யானை..!

கோவை கணுவாய் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் இன்று அதிகாலை 4.40 மணிக்கு ஆண் யானை ஒன்று புகுந்தது. பாரில் இருந்த சிமெண்ட் சீட்டு மற்றும் பல்வேறு பொருட்களை உடைத்து நாசம் செய்தது சத்தம் கேட்டு அங்கே வந்த பார் ஊழியர்கள் யானை நிற்பதை பார்த்து அலறி அடித்து ஓடினர். ஒருவர் யானை முன்பு தெரியாமல் நின்று கொண்டிருந்தார். பின்பு சுதாரித்த அவர் அங்கிருந்து தப்பி ஓடினார். தடாகம் காட்டுப் பகுதியில் இருந்து இந்த ஆண் யானை…

Read More

கோவை சர்க்கார் சாமக்குளத்தில் நாளை புதிய சார்பதிவாளர் அலுவலகம் திறப்பு

கோவை மாவட்டத்தில் 18 சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளது தற்போது கூடுதலாக சர்க்கார் சாமக் குளத்தில் 19வது சார் பதிவாளர் அலுவலகம் நாளை திறக்கப்பட உள்ளது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் முறையில் அலுவலக கட்டடத்தை நாளை திறக்க உள்ளார். பெரியநாயக்கன்பாளையம் மற்றும் அன்னூர் சார் பதிவாளர் எல்லைக்குட்பட்ட சில பகுதிகள் பிரிக்கப்பட்டு சர்க்கார் சாமகுளம் அலுவலக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அக்ரஹார சாமக்குளம் கொண்டையம் பாளையம் வெள்ளமடை கீரணத்தம் சர்க்கார் சாமக்குளம் போன்ற…

Read More