Kfc: கோவையில் சிக்கன் பர்கரில் புழு, உணவு பாதுகாப்பு துறை விசாரணை

கோவை பீளமேடு நவஇந்தியா பகுதியில் kfc ஃபுட் கோர்ட் உள்ளது. இந்த கடையில் நேற்று வாலிபர்கள் சிலர் சிக்கன் பர்கர் வாங்கி சாப்பிட்டனர். அதில் புழு இருந்தது. இது தொடர்பாக வாலிபர்கள் கடை நிர்வாகத்தினரிடம் புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர்களுக்கு உடனடியாக வேறு சிக்கன் பர்கர் வழங்கப்பட்டது. இருப்பினும் குழு நெளிந்த சிக்கன் பர்கர் தொடர்பாக வாலிபர்கள் வீடியோ எடுத்து அதை சோசியல் மீடியாக்களில் பகிர்ந்தனர். இந்த வீடியோ வைரலாக பரவியது. இதை தொடர்ந்து இன்று கோவை…

Read More

கோவையில் தரம் இல்லாத ரோடு பாலம்: வரும் 15ம் தேதி தணிக்கை ரிப்போர்ட் வெளியீடு…

மதுக்கரை மைல் கல் பாலம்… கோவை மாவட்டத்தில் மாநில, தேசிய நெடுஞ்சாலைத்துறையில் ரோடு, சிறுபாலம், மேம்பாலம், பழைய ரோடு சீரமைப்பு, மழை நீர் வடிகால், சாலை பாதுகாப்பு கட்டமைப்பு, சந்திப்பு பகுதி மேம்பாடு என பல்வேறு திட்ட பணிகள் நடத்தப்பட்டது. இந்த பணிகளில், தரம் தொடர்பாக பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன், வேறு கோட்டத்தில் பணி செய்த அதிகாரிகளை வைத்து ரோடு, பாலம் பணிகளில் ஆய்வு நடத்தப்பட்டது தார் களம், கான்கிரீட் மாதிரிகளை…

Read More

rainy: கன மழை தொடர்கிறது. சிறுவாணி அணை நீர்மட்டம் உயர்வு…

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சிறுவாணி அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த 3ம் தேதி அணையின் நீர் பிடிப்பு பகுதியில் 5 மி.மீட்டர் மழை பெய்தது. கடந்த 4ம் தேதி 31 மி.மீட்டர் மழையும், கடந்த 5ம் தேதி 42 மில்லி மீட்டர், கடந்த 6ம் தேதி 42 மி.மீட்டர் மழையும் கடந்த 7ம் தேதி 22 மி.மீட்டர் மழையும் பெய்தது. நேற்றும் கனமழை…

Read More

Women safety: பாதுகாப்பு பணியில் போலீசார் உஷார்… கமிஷனர் தகவல்

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் கூறியதாவது: கோவை மாநகரில் பெண்களின் பாதுகாப்பிற்கு முக்கியதுவம் கொடுக்கப்பட்டு வருகிறது. பிங்க் பேட்ரோல் போலீசார் இரவு நேரங்களில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். இரவு நேரங்களில் எங்கேயாவது குழந்தைகள், பெண்கள் தனியாக நிற்பது பார்த்தால் அவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது. சந்தேகப்படும்படி இருந்தால் அவர்களது குடும்பத்தினரிடம் விசாரித்து அவர்களை பிங்க பேட்ரோல் போலீசார் காரில் அழைத்து சென்று வீடுகளில் பத்திரமாக ஒப்படைத்து வருகின்றனர். அதேபோல விடுதியில் தங்கி படிக்கும், வேலைக்கு…

Read More

மாணவர் கழுத்தில் கத்தி வைத்து பணம் செல்போன் பறிப்பு…

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், பொதுவார்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் மகன் கதிர் (20). இவர் கோவையில் பி.டெக்., ஐடி 3ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 5ம் தேதி மாலை கதிர் குனியமுத்தூர் பெருமாள்சாமி நகரில் உள்ள தனது நண்பன் சுரேஷ் என்பவரின் அறைக்குச் சென்றிருந்தார். அப்போது, கதிருக்கு ஏற்கனவே அறிமுகமான 4 பேர் திடீரென அறைக்குள் அத்துமீறி புகுந்தனர். அவர்கள் கதிரை தகாத வார்த்தைகளால் திட்டி, முட்டி போடுமாறு மிரட்டியுள்ளனர். அதற்கு கதிர் மறுத்துள்ளார். இதனால்…

Read More

Gen z: கோவையில் ‘ஜென் சி’ இளம் தலைமுறையினர் சந்திப்பு…!

கோவையில் திமுக சார்பில் ஜென் இசட் என்ற இளைஞர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று இரவு நடந்தது. இதில் இளம் தலைமுறை இளைஞர்கள் பலர் கலந்து கொண்டு அரசியல், நாட்டு நடப்பு விவரங்களை பகிர்ந்தனர். தமிழக சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்த நிலையில் இளைஞர்களை கவரும் முயற்சியில் திமுக தீவிரமாக இறங்கி உள்ளது. பல்வேறு மாவட்டங்களில் திமுக சார்பில் இளைஞர் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கோவையில் சரவணம்பட்டி பகுதியில் திமுக சார்பில் இளைஞர் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று ஏற்பாடு…

Read More

liquor issue: டாஸ்மாக் சரக்குக்கு பில் ரசீது தருவாங்களா…

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபாட்டிலுக்கு பில்லிங் மெசின் மூலமாக ரசீது வழங்காமல் இருப்பதே முறைகேடு தொடர முக்கிய காரணமாக இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மதுபாட்டில்களுக்கு கூடுதல் தொகை வாங்குவதாக புகார் பெறப்பட்டது. பல இடங்களில் மதுபானம் வாங்குவோர் கூடுதல் தொகை தர மறுத்தால் மதுபாட்டில்களை விற்பனையாளர்கள் தர மறுப்பதாக தெரியவந்தது. மதுபாட்டில்கள் விற்பனையில் பெரும் மோசடி நடக்கிறது. கூடுதல் தொகை விவகாரத்தை தவிர்க்க பில் வழங்கும் திட்டம் சென்னை, காஞ்சிபுரம், கரூர், திருப்பூர், கோவை உள்பட அனைத்து…

Read More

Forest settlement: கோவை மலை கிராமங்களில் அட்டைப்பூச்சி கடி…

கோவை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்கிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள ஆனைகட்டி, சிறுவாணி அடிவாரத்தில் உள்ள ஜாகிர் பொரத்தி, சர்க்கார் பொரத்தி, வெள்ளப்பதி உள்ளிட்ட மலை கிராமங்களில் பூச்சி கடியால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பகுதியில் நீர் தேக்கம் உள்ள இடங்களில் அட்டை, சிறு வண்டு கடிப்பதாகவும், ஈச்சம் புல் வேந்த கூரை வீடுகளில் சிறு பூச்சிகள் அதிகமாக இருப்பதாக மலை கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இரவு நேரங்களில் பூச்சி கடி அதிகமாக இருப்பதால்…

Read More

Agri University: இளம் அறிவியல் கோர்சில் சேர 28700 பேர் விண்ணப்பம்…

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகம் (வேளாண்மைப பிரிவு) இந்த கல்வியாண்டில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கும் (TNAU) மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கும் (AU) ஒரே விண்ணப்பம் வழியாக இளமறிவியல் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. பட்டம் மற்றும் பட்டயம் பயில சுமார் 28700 பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 14 இளமறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், 3 பட்டயப்படிப்புகளுக்கும் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் 3 இளமறிவியல் வேளாண் பாடப்பிரிவுகளுக்கும் ஒருமித்த வகையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது….

Read More

Apartment incident: கோவையில் 13 வது மாடியில் இருந்து விழுந்தவர் சாவு…

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் சாஜன் குமார் அகர்வால் (65). இவர் கோவை பொன்னையராஜபுரம் பகுதியில் உள்ள 17 மாடிகளை கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவர் சொந்தமாக துணி வியாபாரம் செய்து வந்தார். இவருடன் இவரது மகன் ராகுல் அகர்வால் மற்றும் குடும்பத்தினரும் அதே குடியிருப்பின் 13-வது மாடியில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று சாஜன் குமார் அகர்வால் தனது வீட்டில் உள்ள ஜன்னல் அருகே நாற்காலி ஒன்றின் மீது…

Read More