rainy: கன மழை தொடர்கிறது. சிறுவாணி அணை நீர்மட்டம் உயர்வு…

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சிறுவாணி அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

கடந்த 3ம் தேதி அணையின் நீர் பிடிப்பு பகுதியில் 5 மி.மீட்டர் மழை பெய்தது. கடந்த 4ம் தேதி 31 மி.மீட்டர் மழையும், கடந்த 5ம் தேதி 42 மில்லி மீட்டர், கடந்த 6ம் தேதி 42 மி.மீட்டர் மழையும் கடந்த 7ம் தேதி 22 மி.மீட்டர் மழையும் பெய்தது. நேற்றும் கனமழை நீடித்தது. அணையின் நீர்மட்டம் அதல பாதாளத்தில் இருந்தது.

தற்போது ஒரு அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி 846 அடியாக நீர்மட்டம் இருக்கிறது. அணையின் மொத்த நீர் தேக்க உயரம் 50 அடி நீர் மட்டம் உச்சநிலையை எட்டுவதற்கு அதிக மழை எதிர்பார்க்கப்படுகிறது. வரும் நாட்களில் தொடர்ந்து கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலமாக அணையின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. நேற்றைய நிலவரப்படி அணையிலிருந்து 39.40 மில்லியன் லிட்டர் குடிநீர் பெறப்பட்டது. தினமும் 100 மில்லியன் லிட்டர் அதாவது 10 கோடி லிட்டர் குடிநீர் பெறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நீர்மட்டம் தரை மட்டத்தில் இருப்பதால் குடிநீர் எடுக்கும் அளவு வெகுவாக குறைக்கப்பட்டது.

மழை நீடித்து அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தால் வரும் நாட்களில் குடிநீர் விநியோகம் செய்யும் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் என குடிநீர் வடிகால் வாரியத்தினர் தெரிவித்தனர் மேற்கு தொடர்ச்சி மலையில் காற்றுடன் கனமழை பெய்ததால் பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. சில நாட்களுக்கு முன்பு சிறுவாணி அணைக்கு செல்லும் ரோட்டில் மரம் ஒன்று சாய்ந்து விழுந்தது.

இந்த மரம் அப்புறப்படுத்தப்பட்ட பின்னர் வாகனங்கள் சென்று வர வழிவகை செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *