மதுக்கரை பைபாஸ் ரோட்டில் ஆம்புலன்ஸ் கார் மோதல்..

கோவை மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோடு போடி பாளையம் பிரிவு பகுதியில் இன்று காலை ஆம்புலன்ஸ் மற்றும் கார் நேருக்கு நேர் மோதியது. இதில் கார் மற்றும் ஆம்புலன்ஸ் ஓடி வந்த இரண்டு பேர் காயமடைந்தனர். இரண்டு வாகனங்களும் ஊருக்குலைந்து சேதமானது. ஏற்கனவே இந்தப் பகுதி விபத்து அபாய இடமாக இருக்கிறது. பைபாஸோட விரிவாக்கம் செய்யும் திட்டம் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கிறது. தினமும் விபத்து ஏற்படுவதால் பைபாஸ் ரோட்டில் வாகனங்களில் செல்ல பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Read More

கோவை மாவட்டத்தில் பொங்கல் விழா..

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்கள், பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை பத்திரப்பதிவு உள்பட பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களில் இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அரிசி மாவில் கோலமிட்டு பொங்கல் வைத்து படையல் போட்டு புத்தாடை அணிந்து அரசு ஊழியர்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். கலெக்டர் அலுவலகத்தில் பாடல்களைப் பாடி அரசு ஊழியர்கள் அசத்தினர். கயிறு இழுத்தல் , உறியடித்தல் மற்றும் பல்வேறு கலை…

Read More

வரும் 16ம் தேதி டாஸ்மாக் கடை லீவு

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து அரசு மதுபானக்கடைகள், பார்கள், பொழுதுபோக்கு மனமகிழ்மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள், தமிழ்நாடு ஹோட்டல், சுற்றுலாத்துறை மூலமாக நடத்தப்படும் மதுக்கூடங்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் உள்ளிட்ட அனைத்து உரிமத்தளங்களையும் வரும் 16ம் தேதி திருவள்ளுவர் தினத்தன்று மூட உத்திரவிடப்பட்டுள்ளது. மதுபான விதிமுறைகளுக்கு முரணாக அன்றைய தினம் மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீதும், மதுபான வகைகள் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்தாலோ அல்லது மதுபான…

Read More

கோவை மாவட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள் யாருக்கு சீட்டு..!

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளும் அதிமுக, பாஜ கூட்டணி வசம் இருக்கிறது. கடந்த 2021ம் ஆண்டு தேர்தலில் இவர்கள் மொத்தமாக வென்றார்கள். ஆனால் ஓட்டு வித்தியாசம் சொற்ப அளவில் தான் இருந்தது. இந்த நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில், சிட்டிங் எம்எல்ஏக்கள் தொகுதி மாற திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் ஒரிரு எம்எல்ஏக்கள் மறுபடியும் சீட் வாங்கி ஜெயிக்க முடியாது. வேண்டாம் விட்டு விடுங்கள் என கூறுவதாக தெரியவந்துள்ளது. மேட்டுப்பாளையம் தொகுதி எம்எல்ஏ செல்வராஜ் மறுபடியும்…

Read More

ஓட்டு போடறது எப்படி… விரைவில் வாக்காளர்களுக்கு பயிற்சி

கோவை மாவட்டத்தில் கோவை வடக்கு, தெற்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் என 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இந்த தொகுதியில் வரும் சட்டமன்ற தேர்தலுக்காக 5463 ஓட்டு சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. மாவட்ட அளவில், சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர்களுக்கு ஓட்டு போட பயிற்சி வழங்கவேண்டும் என தேர்தல் கமிஷன் தெரிவித்தது. தற்போது ஓட்டு மெசின்கள் சரி பார்ப்பு பணி முடிந்தது. பயன்பாட்டில் 19,117 மெசின்கள் வைக்கப்பட்டது. இவை அனைத்தும் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டிருக்கிறது. இதில் 300 ஓட்டு மெசின்களை…

Read More

ஜனாதிபதி தேநீர் விருந்துக்கு கோவை பெண் ஆட்டோ டிரைவருக்கு அழைப்பு..!

கோவை கவுண்டம்பாளையம் சாமுண்டீஸ்வரி நகர் பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவரின் மனைவி சங்கீதா (40). ஆட்டோ டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது கணவர் கட்டட தொழிலாளி .சங்கீதா தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்சங்கீதாவிற்கு சுயமாக தொழில் செய்ய வேண்டும் என ஆசை இருந்தது. தனக்கு பிடித்தமான ஆட்டோவை வாங்கி ஓட்டலாம் என நினைத்து 7 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்டோ வாங்கினார். கோவை நகரில் இவர் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கிறார். இவர் தனது இடத்தில் பிரதம மந்திரி…

Read More

வீட்டை இடிக்காதீங்க. . கலெக்டரிடம் மக்கள் புகார்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அன்னூர் குமரபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்றுபுகார் மனு அளித்தனர். இந்த மனுவில் எங்கள் பகுதியில் 25 வீடுகளை இடிப்பதற்கு திட்டமிட்டு இருக்கிறார்கள். ரோடு அகலப்படுத்தும் பணிக்காக வீடுகளை காலி செய்ய வேண்டும் .உங்களுக்கு வேறு இடத்தில் மனை இடம் தருகிறோம் என தெரிவித்தனர். வேடர் காலனியில் இடம் வழங்க போவதாக கூறியிருக்கிறார்கள் . அது வன எல்லை பகுதியாக இருப்பதால் அங்கே வன விலங்குகளால் பாதிப்பு ஏற்படும் நிலைமை இருக்கிறது…

Read More

ரேக்ளா வண்டியில் ஐஜி, எஸ்.பி ரவுண்ட்ஸ்

கோவை ஆயுதப்படை மைதானத்தில் போலீஸ் சார்பில் பொங்கல் விழா நேற்று நடந்தது . இதில் தமிழக மேற்கு மண்டல போலீஸ் ஐஜி சரவண சுந்தர், கோவை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். கயிறு இழுக்கும் போட்டி , உறி அடிக்கும் போட்டி, மாட்டுவண்டி பயணம் என விழா அமர்க்கள படுத்தப்பட்டது. போலீஸ் அதிகாரிகள் காளை மாட்டு வாகனங்களில் ஏறி மைதானத்தில் வலம் வந்தனர். பொங்கல் வைத்து குடும்பத்தினருடன் கொண்டாடினர். இதில் ஏராளமான போலீசார்…

Read More

உணவு வேணாம் ஊதியம் வேணும்…கோவை மாநகராட்சி தொழிலாளர்கள் போராட்டம்..

கோவை மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு பகுதிகளில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்கள் இன்று காலை மாநகராட்சி சார்பில் தினமும் வழங்கப்படும் காலை உணவு வாங்க மறுத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர் . அப்போது அவர்கள் கூறுகையில்,” எங்களுக்கு ஊதியம் முறையாக வழங்க வேண்டும். உணவை கொடுத்து வேலை செய்யுங்கள் என சொன்னால் அதை நாங்கள் ஏற்க மாட்டோம் . நீங்கள் முறையான ஊதியம் கொடுத்தால் நாங்கள் வாழ முடியும். எங்கள் குடும்பம் வாழ முடியும் . வெறும்…

Read More

இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்ய உத்தரவு

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்த பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் இன்று நடந்தது. இதில் தேர்தல் பார்வையாளர் குல்தீப் நாராயண் கலந்து கொண்டு கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் தொடர்பான விபரங்களை கேட்டார். முகவரி மாறியவர்கள் நீக்கப்பட்டவர்கள் தொடர்பான புகார்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என விசாரித்தார். வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகளை சரி செய்து விரைவில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் வகையில் பணிகளை மேற்கொள்ள…

Read More