உயர்கல்வி கற்காத 15 சதவீத மாணவர்கள்… கலெக்டர் விசாரணை

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உயர் கல்வி தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது.

இதில் மாவட்ட அளவில் பள்ளி படிப்பு முடித்த சிலர் உயர் கல்வி கற்காமல் இருப்பதாக தெரியவந்தது. இது தொடர்பாக கல்வித்துறையினர் ஆய்வு செய்து படிக்க சொல்லி கேட்ட போது சில பெற்றோர் தங்களது குழந்தைகள் கல்வி கற்க விருப்பம் இருந்தும் படிக்க அனுப்பவில்லை என தெரியவந்தது.

கோவை மாவட்டத்தில் நடப்பாண்டில் உயர்கல்விக்கான தேர்வில் 10408 பேர் இருந்தனர். ஆனால் 8754 பேர் மட்டுமே படிக்க முன் வந்தனர். 1654 பேர் உயர் கல்வி கற்கவில்லை என தெரியவந்தது. 15 சதவீதம் பேர் படிக்க வராதது தொடர்பாக விசாரித்த போது வறுமை, குடும்ப பிரச்னை முக்கிய காரணமாக தெரிவிக்கப்பட்டது.

கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் படிப்பை தொடர முடியாதவர்களை சந்தித்து பேச வேண்டும். தன்னை சந்திக்க வைத்தால் பெற்றோரிடம் பேசி படிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து தருவேன் என உறுதி தந்தார். மாவட்ட அளவில் கடந்த 2025ம் ஆண்டில் 98.4 சதவீதம் பேர், 2024ம் ஆண்டில் 93.25 சதவீதம் பேர் உயர் கல்வியில் இணைந்தனர். கடந்த 2023ம் ஆண்டில் 83.89 சதவீதம் பேர் மட்டுமே உயர் கல்வி பெற்றது ஆய்வில் தெரியவந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *