கோவையில் கஞ்சா போதை தடுப்பு தீவிரம்…
கோவை மாநகர பகுதியில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் பறிமுதல் செய்யும் பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 14ம் தேதி முதல் ஜூலை மே தேதி வரை அதிரடிப்படையினர் வடக்கு சரகத்தில் 2 கிலோ 935 கிராம் கஞ்சா, 22 கிராம் மெத்தபெட்டமையின் பறிமுதல் செய்து 3 வழக்குகள் பதிவு செய்து உள்ளனர். அதேபோல தெற்கு சரகத்தில் 19 கிலோ 291 கிராம் கஞ்சா, 20 போதை மாத்திரை ஆகியவற்றை பறிமுதல் செய்து 7 வழக்குகள் பதிவு செய்து உள்ளனர்.
இவ்வாறு மொத்தம் 22 கிலோ 226 கிராம் கஞ்சா, 22 கிராம் மெத்தபெட்டமையின், 20 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து 10 வழககுகள் பதிவு செய்துள்ளார். அதே காலகட்டத்தில் மாறகர போலீசார 123 கிலோ 438 கிராம் கஞ்சா, 23 கிராம் மெத்தபெட்டமையின், 1536 கிலோ 645 கிராம் குட்கா, 14,812 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து கஞ்சாவிற்கு AB வழக்குகளும், குட்காவிற்கு 134 வழக்குகளும் பதிவு செய்து உள்ளனர்.
இதை தவிர தடை செய்யப்பட்ட லாட்டரி விற்ற 17 பேரை கைது செய்து ரூ.22 ஆயிரத்து 150 மதிப்புள்ள 443 லாட்டரி மற்றும் அவர்களிடம் இருந்து ரூ.22 ஆயிரத்து 800 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல கோவை மாறகர போலீசார் கடந்த 3ம் தேதி (இரவு) வெள்ளி சனி மற்றும் ஞாயிறு ஆகிய 3 நாட்களில் ஸ்டார்மிங் ஆபரேஷன் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் முதல் நாளில் 758 கிலோ 482 கிராம் குட்கா, 3 கிலோ 100 கிராம் கஞ்சா, 1100 போதை மாத்திரை, 1230 ஊசி. 23 மது பாட்டில் 4 செல்போன், ரூ.50 ஆயிரத்து 500 பணம், ஆவணங்கள் இவ்வாத ஒரு பைக, ஒரு கார ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 14 பேர் கைது செய்யப்பட்டனர். அதேபோல பிடிவாரண்ட் குற்றவாளிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர் 2வறு நாள் (சனிக்கிழமை) 1275 கிலோ 840 கிராம் குட்கா, 7 கிலோ 20 கிராம் கஞ்சா, 36 கஞ்சா சாகலேட், 108 போதை மாத்திரை, 5 ஊசி 1 செல்போன், ஒரு சுத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்து 24 வழக்கு பதிவு செய்தனர்.
அதில் 30 பேரை போலீசார் கைது செய்தனர். பிடிவாரண்ட குற்றவாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். 3வது நாளில் 23 கிலோ 750 கிராம் குட்கா, 20 கிலோ 165 கிராம் கஞ்சா, 12 மது பாட்டில், 5 கேரளா லாட்டரி சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டரது. 12,300, கஞ்சா வியாபாரிகளிடம் இருந்து ரூ.5500, மற்றும் 4 செவ்போன, ஆவணங்கள் இல்லாத 6 பைக், ஒரு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக 34 34 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 46 பேர் கைது செய்யப்பட்டனர். 2 பிடிவாரண்ட் குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.
இவ்வாறு கடந்த 3 நாட்களில் 2058 கிலோ 72 கிராம் குட்கா 30 கிலோ 285 கிராய் கஞ்சா, 36 கஞ்சா சாக்லேட், 208 போதை மாத்திரை, 1235 ஊசி, 35 மது பாட்டில், ஒரு சுத்தி, 5 கேரளா லாட்டரி ரூ. 68 ஆயிரத்து 300 மற்றும் 9 செல்போன், 7 பைக, 2 கார ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 90 பேர் கைது செய்யப்பட்டனர்.
10 பிடிவாரண்ட் குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். இவ்வாறு கடந்த மே மாதம் 14ம் தேதி முதல் ஜூலை 3ம் தேதி வரையும், 3ம் தேதி முதல் 5ம் தேதி வரையும் என கோவை மாநகரில் 53 நாட்களில் 140 கிலோ கஞ்சா. 4.907 கிலோ குட்கா, 15 ஆயிரம் போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், போலீசார் போதை பொருள் கடத்தல், விற்பனை, பயன்பாடு ஆகியவறறை தடுக்க பலவேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். பெரும்பாலும் போதை பொருட்களை கொரியர் மூலம் கடத்தப்படுவது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கூரியர் நிறுவனங்களுக்கு பலவேறு கட்டுப்பாடுகளையும், கடுமையான எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் கமிஷனர் கண்ணன் கூறியதாவது:
போதை மாத்திரைகளை பயன்படுத்தி யாராவது உயிரிழந்தால் அந்த மாத்திரை விற்ற கடைக்காரர் கொலையாளியாக வழக்கில சேர்க்கப்படுவார் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேபோல அதிகளவில் போதை பொருட்கள் கூரியர் மூலம் வருவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதலனால் கொரியர் நிறுவனங்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது
முன்பு கொரியரில் வரும் பொருட்கள் என்னவென்று தெரியவில்லை என கூறி கூரியர் நிறுவன ஊழியர்கள் தப்பி வந்தனர். தற்போது அவ்வாறு தப்ப முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து கூரியர் நிறுவனங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த கூறப்பட்டுள்ளது. ஒரு நபர் கூரியர் அனுப்ப வந்தால் அவர்களின் முழு விவரங்களையும், கூரியர் பெறும் நபரின் முழு விவரங்களையும் பெற வேண்டும். செல்போன் எண்ணில் அழைத்தால் வந்து பெற்று கொள்வார்கள் என யாராது கூறினால், அவர்களது தகவலை போலீசாருக்கு தெரிவிக்க அறிவுத்தியுள்ளோம்.
நேரடியாக கூரியர் நிறுவனத்திற்கு வந்து பார்சல் பெற்று கொள்வதாக தெரிவித்தாலும், அவர்களது முழு விவரங்களை பெற்று வைக்க வேண்டும். போதை பொருட்களை கடத்தும் நபர்கள் ஒட்டல்களில் தங்குவது இல்லை. போலீசாரின் சோதனையில் மாட்டி விடுவோம் என அவரகளுக்கு தெரியும். இதனால் கல்லூரி மாணவரகளின் அறைகளை நாடி செல்கின்றனர்.
அவர்களும் மது பணத்திற்காக தங்க வைக்கின்றனர். அவ்வாறு குற்றவாளிகளை தங்க வைக்கும். மாணவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என அனைத்து கல்லூரிகளிலும், அந்தந்த போலீஸ் ஸ்டேஷன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாநகரில் போதை பொருள் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது. விரைவில் முற்றிலும் தடுக்கப்படும்.
