கோவையில் தங்க கட்டி வாங்கி மோசடி: பாஜக நிர்வாகி கைது
கோவை ராஜவீதி பகுதியில் தங்க நகை கடை நடத்தி வருபவர் லட்சுமி நரசிம்மர் ராஜ். இவரிடம் உக்கடம் கெம்பட்டி காலனி பகுதியை சேர்ந்த தங்கப்பட்டறை நடத்திவரும் மனோகரன் (35) என்பவர் கடந்த ஆண்டு 141 கிராம் எடையில் சொக்கத்தங்கம் வாங்கினார் . இதனை ஆபரணமாக செய்து தருவதாக அவர் வாங்கியுள்ளார். ஆனால் பல மாதமாகியும் அவர் தங்க நகை செய்து தரவில்லை. தான் வாங்கிய தங்கத்தையும் திருப்பித் தரவில்லை. இது தொடர்பாக லட்சுமி நரசிம்மர் ராஜ் கேட்டபோது…
