கோவையில் செல்போன் கோபுரம் அமைக்க மக்கள் எதிர்ப்பு: கலெக்டர் அலுவலகம் முற்றுகை

கோவை பீளமேடு ரங்கம்மாள் கோவில் வீதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த பகுதியில் தனியார் செல்போன் நிறுவனம் சார்பில் ஒரு வீட்டு மாடியில் செல்போன் கோபுரம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இதற்கு அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இன்று மதியம் இந்த பகுதி மக்கள் கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க முயன்றனர்….

Read More