முதல்வர் விஜய்க்கு வல்லாரைக் கீரை பார்சல்… 3 பேர் கைது
கோவை கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள தபால் நிலையத்தில் தமிழ்ப்புலிகள் பொதுச்செயலாளர் இளவேனில் தலைமையில் தமிழக முதல்வருக்கு தேர்தல் அறிக்கையை நினைவூட்டும் வகையில் வல்லாரைக் கீரையை இன்று காலை தபால் மூலம் அனுப்ப முயன்றனர். அப்போது அவர்களை ரேஸ் கோர்ஸ் போலீசார் தடுத்து நிறுத்தி மூன்று பேரை கைது செய்தனர். இது குறித்து அவர்கள் கூறுகையில்: தவெக ஆட்சி பொறுப்பேற்று ஒரு மாதமான நிலையில், தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகள் குறித்து அரசு பேசுவதற்கும், அவற்றை செயல்படுத்துவதற்கும்…
