கோவையில் பூண்டி வெள்ளிங்கிரி மலை ஏறிய மாணவர் சாவு
தர்மபுரி மாவட்டம் பீடம் நேரி பகுதியை சேர்ந்தவர் முகேஷ் குமார்( 23). இவர் கோவை பேரூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி ஃபார்ம் படித்து வருகிறார். நேற்று இரவு இவர் தனது நண்பர்கள் எட்டு பேருடன் வெள்ளிங்கிரி மலை ஏறினார் . அப்போது ஐந்தாவது மலைக்கு சென்ற போது இவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.இதைத் தொடர்ந்து இறந்தவரின் சடலம் டோலி கட்டி மலையிலிருந்து கீழே இறக்கப்பட்டது. நடப்பாண்டில் வெள்ளிங்கிரி மலை ஏறிய ஆறு பேர்…
