பிரதமர் நரேந்திர மோடி வரும் 18ம் தேதி கோவை வருகை…!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரும் 18ம் தேதி கோவை வருகிறார். கோவை மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அவர் பீளமேடு கொடிசியா மைதானத்தில் பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார். பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. பொதுக் கூட்டத்தில் கோவை மற்றும் அவிநாசி தொகுதியை சேர்ந்த இரண்டு பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் மற்றும் 9 அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் பேச உள்ளார்….
