கோவையில் கனிமவளத்துறை அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்…
கோவை மாவட்டத்தில் கனிம வளத்துறை துணை இயக்குநராக அண்ணாதுரை, உதவி இயக்குநராக மெகபூப்கான், துணை தாசில்தாராக கணேஷ் ஆகியோர் பணியாற்றி வந்தனர்.
இவர்கள் 3 பேரும் அதிரடியாக பணியிடம் மாற்றப்பட்டனர். 2 மாதம் மாதம் முன்பு துணை இயக்குநராக இருந்த ஜெயபால், உதவி இயக்குநர் சுரேஷ் பணியிடம் மாற்றப்பட்டனர். அதற்கு முன் பணியில் இருந்த இணை இயக்குநர் சுரேஷ் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர். ஒரு அதிகாரி கோவைக்கு பணியிடம் மாற்றிய போது அவர் பதவி ஏற்காமல் விடுப்பில் சென்று விட்டார்.
ஒரு மாதம் கடந்து அவர் வேறு மாவட்டத்திற்கு மாறுதல் வாங்கி சென்று விட்டார் கடந்த ஏப்ரல் முதல் இதுவரை பல அதிகாரிகள் தொடர்ந்து பந்தாடப்பட்டு வருகின்றனர்
கோவை மாவட்டத்தில் ஒரே ஆண்டில் அதிகாரிகள் தொடர்ந்து மாற்றப்பட்டு வருவது கனிம வளத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அதுவும் தீபாவளி நேரத்தில் அதிகாரிகள் மாற்றப்பட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இனி வரப்போகிற அதிகாரிகள் எத்தனை நாட்கள் பணியில் இருப்பார்களோ என தெரியாத நிலையும் இருக்கிறது.
கோவை மாவட்டத்தில் கனிம வள வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. இதில் பல வாகனங்கள் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டியுள்ளது. ஏற்கனவே மாவட்ட அளவில் கல் குவாரிகளில் டிரோன் சர்வே நடத்தப்பட்டது. இதில் முறைகேடுகள் கண்டறியப்பட்டது. நடவடிக்கை எடுக்கும் முன்பு மொத்த அதிகாரிகளை மாற்றியிருப்பதால் பரபரப்பு நிலவுகிறது.
