கோவையில் கூட்டுறவு கடைகளில் 100 ரூபாய்க்கு 10 காய்கறி…

தீபாவளி முன்னிட்டு வடகோவை, சிந்தாமணி கூட்டுறவு அங்காடியில், கூட்டுறவுத்துறையின் சார்பில் ரூ.100-க்கு 10 வகையான காய்கறிகள் அடங்கிய “வெற்றி சிறப்பு காய்கறிகள் தொகுப்பு” விற்பனை இன்று துவங்கியது.

இதனை மாவட்ட கலெக்டர் பவன்குமார் துவக்கிவைத்தார். இதில், சூலூர் எம்எல்ஏ சகுமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அழகிரி, பொது விநியோக திட்ட துணைப்பதிவாளர் சிவக்குமார். உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். இது குறித்து மாவட்ட கலெக்டர் பவன்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழக முதல்வர் கூட்டுறவு துறை சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு “வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு” திட்டத்தை அறிவித்துள்ளார்.

அதன்படி, கோவையில் 13 கூட்டுறவு விற்பனை நிலையங்களில் வரும் 7ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு 10 வகையான காய்கறிகள் அடங்கிய தொகுப்பு ரூ.100 என்ற சிறப்பு விலையில் விற்பனை செய்யப்படும். இந்த தொகுப்பில் 500 கிராம் பெரிய வெங்காயம், 500 கிராம் தக்காளி, 250 கிராம் கத்தரிக்காய், 250 கிராம் உருளைக்கிழங்கு, 200 கிராம் கேரட், 200 கிராம் பீன்ஸ் 100 கிராம், பச்சை மிளகாய்,

100 கிராம் எலுமிச்சை, 50 கிராம் இஞ்சி மற்றும் 400 முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு தேங்காய் ஆகிய 10 வகையான காய்கறிகள் மொத்த எடை 255 முதல் 260 கிலோ வரை எடையுள்ள பொருட்களின் மொத்த மதிப்பு ரூ. 100 ஆகும். மாவட்டத்தில் இச்சிறப்பு மளிகைத்தொகுப்பு, ரங்கே கவுண்டர் வீதி ஸ்ரீ ராமலிங்க சௌடாம்பிகா நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை, அன்னூர் கூட்டுறவு பண்டகசாலை, ஆர்.எஸ்.புரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை பெரியநாயக்கன்பாளையம் லட்சுமி மெஷின் ஓர்க்ஸ் பணியாளர்கள் கூட்டுறவு பண்டகசாலை விட், வடுகபாளையம் பொள்ளாச்சி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலை லிட் பல்லடம் பொள்ளாச்சி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலை லிட், கவுண்டம்பாளையம் தமிழ்நாடு போக்குவரத்து கழக பணியாளர்கள் கூட்டுறவு. பண்டகசாலை, துடியலூர் தமிழ்நாடு போக்குவரத்து கழக பணியாளர்கள் கூட்டுறவு பண்டகசாலை, பாப்பநாயக்கன்பாளையம் லட்சுமி மில்ஸ் பணியாளர்கள் கூட்டுறவு, மாநகராட்சி வணிக வளாகத்திலுள்ள தபால் மற்றும் தந்தி பணியாளர்கள் கூட்டுறவு பண்டகசாலை, சிந்தாமணி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை சூஜார் நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை, இருகூர் ஜின்னிங் பேக்டரி சாலையில் அமைந்துள்ள கூட்டுறவு பண்டகசாலை லிட், ஆகிய விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *