கோவையில் பறக்கும் படை சோதனை: 1 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல்…!
சூலூரில் கலாமணி என்பவர் குடோனில் சிக்கிய 800 பாத்திரங்கள்..
கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் பல்வேறு தேர்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு படையினர் சோதனை செய்து பறிமுதல் செய்து வருகிறார்கள்.
முதல் நாளான 16ம் தேதி 4 இடங்களில் நடந்த சோதனையில் 30,17,150 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. 56,244 ரூபாய் மதிப்பிலான 120 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கடந்த 17ம் தேதி நடந்த சோதனையில் 5. 85 லட்ச ரூபாய் மதிப்பிலான 10 கிலோ கஞ்சா 7.13 லட்ச ரூபாய் மதிப்பிலான சில்வர் ஆபரணம் போன்ற பரிசு பொருட்கள், 66 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வேட்டி சேலை, சமையல் பொருட்கள் போன்ற வகையான பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இரு நாட்களில், 44,38,344 ரூபாய் மதிப்பிலான தொகை, பரிசு பொருட்கள், போதை பொருட்கள் பறிமுதல் செய்து ஒப்படைக்கப்பட்டது. இன்று நடந்த சோதனையில் மேலும் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பணம் பரிசுப் பொருட்கள் தங்க கம்மல் பறிமுதல் செய்யப்பட்டது.
மூன்று நாளில் கோவை மாவட்ட தேர்தல் பிரிவு சார்பில் 1.09 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், நகை, பொருட்கள் , போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
X
