கோவையில் பழைய பிளாஸ்டிக் குடோனில் தீ
கோவை மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோட்டில் செட்டிபாளையம் பகுதியில் பழைய பிளாஸ்டிக் மற்றும் ஸ்கிராப் குடோன் உள்ளது .
இன்று இரவு இந்த குடோனில் திடீரென தீப்பிடித்தது. இதில் அங்கு வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்கள் பல்வேறு பிளாஸ்டிக் பாத்திரங்கள் பழைய இரும்பு மற்றும் தகர பொருட்கள் தீப்பிடித்து எரிந்தது. இது தொடர்பாக கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கும் கிணத்துக்கடவு தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு துறையினர் தீயை போராடி அணைத்தனர் . அதிக வெப்பம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா மின் ஒயர் பழுது காரணமாக தீப்பிடித்து விட்டதா யாராவது பீடி சிகரெட் புகைத்து விட்டு தீக்குச்சியை வீசியதால் தீ பரவியதா என செட்டிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செட்டிபாளையம் பைபாஸ் ரோட்டில் இரவில் பற்றிய தீ காரணமாக அந்த பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது.
