ஜிடி நாயுடு மேம்பாலத்தில் 5 நாட்கள் இரவு நேர வாகன தடை

கோவை அவிநாசி ரோடு ஜிடி நாயுடு மேம்பாலத்தில் நாளை (14ம் தேதி) முதல் வரும் 18ஆம் தேதி வரை பி எஸ் என் எல் ஆப்டிகல் பைபர் கேபிள் அமைக்கும் பணி நடக்க உள்ளது .

இதன் காரணமாக போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது அவிநாசி ரோட்டில் செல்லும் வாகனங்கள் மேம்பாலத்திற்கு கீழ் பகுதியில் உள்ள ரோட்டை பயன்படுத்த வேண்டும் என கோவை மாநகர போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *