தமிழக மக்களை இரண்டாவது முறை ஏமாற்ற முடியாது. .. முன்னாள் முதல்வர் மு க ஸ்டாலின் பேச்சு..
கோவை வஉசி மைதானத்தில் திராவிடர் கழகம் சார்பில் பெரியார் அறிவுலகம் கண்ட திராவிட நாயகருக்கு நன்றி பாராட்டு விழா இன்று நடந்தது. இதில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:
இப்போதைய ஆட்சியில் முதலமைச்சர் என்ன டிரஸ் போடணும் அவருடைய அலுவலகம் எங்கே இருக்கணும். அவர் என்ன பொட்டு வைக்கணும் என எல்லாத்துக்குமே ஜோசியர் தானே முடிவு பண்றாரு. என்னுடைய ஆட்சியில் பவர் சென்டரே இருக்காதுன்னு பதவி ஏறும் விழாவில் முதலமைச்சர் விஜய் சொன்னாரே. ஆனா இன்னைக்கு என்ன நிலைமை.
முதலமைச்சர் விஜயை டம்மி ஆக்கிட்டு, அவர் பின்னாடி இருக்கக்கூடிய கார்ப்பரேட் பவர் சென்டர்கள் எல்லாம் இந்த ஆட்சியை ஆட்டிப் படைக்கிறாங்க. இன்னும் சொல்லணும்னா முதலமைச்சரை வச்சு இந்த பவர் சென்டர்கள் வித்தை காட்டுற சர்க்கஸ் தான் தவெக ஆட்சி. யாரெல்லாம் இந்த ஆட்சி வரவேண்டும் என்று வாக்களித்தார்களோ, அவங்க எல்லாருடைய வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு புலம்பிக்கிட்டு இருக்காங்க. இவங்க ஆட்சிக்கு வந்து ஒரே மாதத்திலேயே மின்வெட்டு பிரச்சனை வந்துருச்சு.
மக்கள் எல்லாம் இரவு நேரத்தில் பிள்ளை குட்டியோடு ரோட்டுக்கு வந்துட்டாங்க. இப்ப அவர்களால் அந்த மின்வெட்டு பிரச்னையை சரி செய்ய முடியவில்லை. சிவகங்கை, தூத்துக்குடி, சென்னை என எல்லா ஊரிலும் சகஜமா கொள்ளை நடக்கிறது. இந்த ஆகாவழி ஆட்சியில் தொழில் நகரமாக இருந்த கோவையில, ஒரு மாசத்தில் 10 கொலைகள் நடந்தன. கொள்ளை நகரமா மாறி இருக்கு. அது மட்டுமா மூச்சுக்கு மூச்சு தூய சக்தி ஆட்சின்னு தம்பட்டம் அடிச்சாங்க.
ஆனா இப்படி எல்லாம் துர்நாற்றம் அடிக்கிறது. சமூக ஊடகங்களிலும் செய்தித்தாள்களிலும் ஒவ்வொரு நாளும் பார்த்துட்டு தானே இருக்கிறோம். போதை
பொருள் நடமாட்டத்தை ஒழிப்பதாக சொல்லி இவர்கள் உற்பத்தி பண்ணி ஒளிச்சு வச்சிருக்காங்க.
தொடர்ந்து சிறுமிகள் காணாமல் போகிறார்கள். பெற்றோர்கள் எல்லாம் பயத்தில் நடுக்கத்துடன்
இருக்கிறார்கள்.
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்கதையாக நடந்து கொண்டு இருக்கிறது. அதுவும் இதில் மாட்டுவது யாருன்னு பார்த்தீங்கன்னா, தவெக காரங்க தான். இவங்களுக்கு குற்றவாளிகளை பிடிக்கத்தான் வக்கு இல்லைனு பார்த்தா, சிறையில் இருக்கிற | குற்றவாளிகள் எல்லாரும் தப்பிச்சு போயிட்டு இருக்காங்க.
30 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே சமயத்துல 17 கைதிகள் சிறையிலிருந்து தப்பிச்சு ஓடுன வரலாற்று சாதனை செய்திருக்கிறார்கள். பைலை திறக்கணும்னு சொல்லிட்டு, இப்ப ஜெயில் திறந்துட்டு இருக்காங்க. இதே கோவையில் ஏற்கனவே தப்பிச்சு போன வழக்கில் கைது செய்யப்பட்ட ஒரு குற்றவாளியை திரும்பவும் தப்பிக்க வச்சிருக்காங்க. இன்னொரு பக்கம், தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய முதலீடுகள் எல்லாம் பக்கத்து மாநிலங்களுக்கு போகிறது.
முதலமைச்சர் ஏதாவது பண்ணுவாருன்னு பார்த்தா, அவர் என்ன பண்ணுகிறார். கோட் சூட் போடுகிறார். ஜோசியர் சொன்ன பட்டு வேட்டி, சட்டைபோடுகிறார். ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற பக்கத்து மாநிலங்களுக்கு சிறைச்சாலைக்கு போய் பரிகார பூஜை பண்ணுகிறார்.
திமுக அரசு கட்டி முடித்த திட்டங்களை திறந்து வைத்து கை அசைக்கிறார். 10 டூ 5 வேலைக்கு போகிற மாதிரி பாவலா பண்ணுகிறார். அதுவும் சனி ஞாயிறு லீவு. முதலமைச்சர் பொறுப்பு ஆபீஸ் வேலை இவ் லை. ஆள்கிற விஷயம், முதலமைச்சர் விஜய் அவர்களே, அங்கிள் விஜய் அவர்களே முதலமைச்சர் பொறுப்பு 10 டூ 5 மணி ஆபீஸ் வேலை இல்லை. அதுக்காக ஒட்டுமொத்தமாக தன்னை ஒப்படைச்சுட்டு வாழணும். இது ஒன்னும் சினிமா ஷூட்டிங் மாதிரி வேஷம் போட்டு செட்டுக்கு போயிட்டு வர முடியாது.
எதை கேட்டாலும் அவர்கிட்ட இருந்து வரக்கூடிய ஒரே பதில் என்ன தெரியுமா? திமுக, திமுக, திமுக தான். பாதி ராத்திரியில் போய் யாராவது எழுப்பி கேட்டா ட்டா கூட திமுகன்னு சொல்லிட்டே இருந்திருப்பார். தவெக அமைச்சர்கள் எல்லோரும் என்ன பண்றாங்கன்னா யாருக்கும் தெரியலை, மக்கள் பார்த்துக்கிட்டு இருக்காங்க.
இதுக்கு முன்பு திமுக ஆட்சியில் வேலைகள் எப்படி எல்லாம் வேகமா நடந்துச்சு. அதை கம்பேர் பண்ணி பேச தொடங்கிட்டாங்க இப்போ சிஎம் சார். சினிமா நடிக்கும்போது ஒரு பார்முலா வச்சிருந்தார். என்ன பார்முலா தெரியுமா? அவருடைய ஆன்லைன் மிஷனரி மூலமாக சக நடிகர்கள் மேல அவதூறுகள் கிளப்பிட்டு அவர் ஜெயிச்சிருவாரு. அதே ரூட்ல அரசியலில் ஒரு முறை ஜெயிச்சுட்டார். தமிழ்நாட்டு மக்களை இரண்டாவது முறையும் அவரால் உறுதியாக ஏமாற்ற முடியாது. மக்கள் ஏமாற மாட்டாங்கன்னு நான் நம்புறேன்.
மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால தமிழ்நாட்டில் மிடில் கிளாஸ் ஏழை மக்கள் மாதம் 5 ஆயிரம் ரூபாயிலிருந்து 10,000 ரூபாய் வரை கூடுதலாக செலவு பண்ண வேண்டிய கஷ்டத்துல இருக்காங்க. ஒரு கொத்தமல்லி கட்டு இப்போ 30 ரூபாய் அரிசி, காய்கறிகளை வாங்குவதற்கே மக்களால் முடியவில்லை.
பண்டிகை காலத்துல கூட அவங்களால கூடுதலாக செலவு செய்ய முடியவில்லை. அவர்களுடைய கண்ணீரை இந்த ஆட்சியை முடிச்சு வச்சிரும். இந்த ஆட்சி நீடிக்காது. இந்த ஆட்சிக்கு இப்ப ரெட் அலர்ட் கூடிய விரைவில் இந்த ஆட்சிக்கு புல் ஸ்டாப் வைக்கிறதுதான் தமிழ்நாடு எனும் அறிவுலகத்துக்கு நல்லது. இங்கு இளைஞர்கள் வந்திருக்கீங்க. இந்த தேர்தலை பல இளைஞர்கள் மாற்றம், மாற்றம்னு சொல்லி வீட்டில் இருக்கிறவங்களை எல்லாம் ஓட்டு போட வச்சாங்க.
ஆனா கொலையும், பாவியல் வன்முறையுமாக இருக்கக்கூடிய இந்த ஆட்சி தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கக்கூடிய தவறான மாற்றம்னு அவங்களுக்கு புரிகிற மாதிரி எடுத்துச் சொல்லுங்க. நிறைய பேர் பாலிடிக்ஸ் பேச ஆரம்பிச்சுட்டாங்கன்னு சொல்கிறார்கள். போலி வீடியோக்களை பரப்பி, ஆளுங்கட்சி செய்து கொண்டிருப்பது ஹெல்தி பாலிடிக்ஸ் அல்ல,
இன்று போனில் தான் இளைஞர்கள், பெண்கள் அதிக நேரம் செலவிடுகிறார்கள். நம்முடைய போனுக்கு வரும் மெசேஜ்களும் இன்ப்ளுயன்சர் வீடியோக்களும் வெறும் தகவல் மட்டும்தான். தகவலை தெரிஞ்சுக்கிறதை உண்மை என புரிஞ்சுக்கிறதுக்கு நிறைய வேறுபாடு இருக்கு இதை குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் எல்லோரும் உணர வேண்டும். உண்மையைப் பார்த்து பொய் பயப்படும். வெளிச்சத்தைப் பார்த்து இருள் பயப்படும். தமிழ்நாட்டின் சமூகப் பார்வையும் தனித்தன்மையும் வழங்கிடாமல், பெரியார் அறிவுலகம் போன்ற நூலகங்கள் பாதுகாக்கட்டும். இவ்வாறு அவர் பேசினார்.
