விஜய் சேதுபதிக்கு கட்டம் சரியில்ல, கட்சிக்காக பேசி இருக்கிறார்… எம் எல்ஏ கனிமொழி காட்டம்
கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் செரையம்பாளையம்-நீலாம்பூர் இடையே அரசு பேருந்து சேவையை இன்று தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி தெரிவித்த தலைமைத்துவம் தொடர்பான கருத்துகள் அரசியல் விவாதமாக மாறியது குறித்த நிருபர்களின் கேள்விக்கு எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் கூறியதாவது:
விஜய் சேதுபதி மகாராஜா திரைப்படம் நடிப்பதற்கு முன்பு அவருடைய நிலை எப்படி உள்ளது என்பதை கட்டங்கள் பார்த்து கூறி இருந்தேன். அப்போது, அவருக்கு ஜாக்பாட் அடிக்க போகிறது என கூறியிருந்தேன். பிக் பாஸ் நிகழ்ச்சி அவருக்கு ஒரு ஜாக்பாட் ஆக இருந்தது. இந்த 100 நாளில் சுமார் ரூ.80 கோடி வரை அவர் சம்பளம் வாங்குவார்
எனவே, சம்பளத்திற்காக அவர் பேசியிருக்கிறார். அந்த தொலைக்காட்சியிடம் கேட்கும் போது முதல்வரை குறிப்பிட்டு நாங்கள் பேசவில்லை என விளக்கம் கூறுகிறார்கள். ஆனால், ஓபனாக சொல்ல வேண்டும் என்றால் அது வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல தான். ஜனநாயக நாட்டில் அரசியல் விமர்சனம் செய்வதற்கான கருத்துரிமை அனைவருக்கும் இருக்கிறது.
யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். விஜய் சேதுபதி கண்டிப்பாக குறிப்பிட்ட கட்சியினரிடம் இருந்து காசு வாங்கிக்கொண்டு பேசுகிறார். மேலும் குறிப்பிட்ட ஒரு கட்சியின் மீது குற்றச்சாட்டு வைக்க வேண்டும் என்றால், அந்தக் கட்சியின் பெயரை குறிப்பிட்டு பேசலாம்.
எங்கள் தலைவர் விஜய் பெயரை குறிப்பிட்டு பேசட்டும் அதற்கு மக்கள் தங்களுடைய பதிலை சொல்வார்கள். ஒரு நிகழ்ச்சியில் பொதுவாக பேசப்படும் கருத்துகளை அரசியல் ரீதியாக மக்கள் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பது வேறு விஷயம். ஆனால், அரசியல் விமர்சனம் என்றால் அது வெளிப்படையாக இருக்க வேண்டும்.
இதனை பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அவர் அவரின் பிழைப்பிற்காக செய்கிறார். விஜய் சேதுபதிக்கு கட்டம் சரியில்லை. இதோடு விட்டு விட்டால் நன்றாக இருக்கும். விஜய் சேதுபதி பேசுவதால் மட்டும் அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை.
இந்த அரசின் செயல்பாடுகளை மக்கள் நேரடியாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களிடம் சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து, அவற்றுக்கு தீர்வு காண்பதே எங்களுடைய முக்கிய நோக்கம். இந்த அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. மக்களின் தேவைகள் என்ன என்பதை அறிந்து, அதற்கேற்ப திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். கவுண்டம்பாளையம் தொகுதியிலும் நீண்ட நாட்களாக தீர்வு காணப்படாமல் இருந்த கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
அரசியலில் யார்? வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம். ஆனால் இறுதியில் மக்கள் எதை உண்மை என்று ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதுதான் முக்கியம். மக்கள் நேரடியாக காணும் செயல்பாடுகளின் அடிப்படையில்தான் தங்களது முடிவுகளை எடுப்பார்கள். இடைத்தேர்தலில் எங்கள் தலைவர் யாரை நிற்க வைக்கிறாரோ அவர்தான் வெற்றியாளார். இவ்வாறு அவர் கூறினார்.

Been playing here for a week and the winning streaks are real. The atmosphere and the game mechanics are just spot on. Love ph33jili so much.
Very user friendly layout and the promotions are actually worth it. I feel lucky whenever I log in here. Check out luky97login
Домашнее лечение может применяться при относительно стабильном состоянии человека. Лечение алкоголизма начинается с устранения острых нарушений, но лечение не заканчивается только капельницей. Для устойчивого результата требуется дальнейшее лечение зависимости, консультация врача, психологическая поддержка и, при необходимости, реабилитация.
Узнать больше – запой нарколог на дом в Луганске