மருதமலையில் குட்டி கருஞ்சிறுத்தை மீட்பு..

கோவை மருதமலை தொழு நோயாளிகள் குடியிருப்பு பகுதியில் கருஞ்சிறுத்தைக் குட்டி ஒன்று மீட்கப்பட்டது. தாயைப் பிரிந்து சுற்றிக் கொண்டிருந்த இந்த குட்டி சிறுத்தையை வனத்துறையினர் மீட்டு கூண்டில் அடைத்துள்ளனர். தாய் சிறுத்தை எங்கே இருக்கிறது என வனத்துறை என தேடி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக கருஞ்சிறுத்தை நடமாட்டம் மருதமலை வனப்பகுதியில் காணப்பட்டது. கோயிலுக்கு செல்லும் வழியில் இந்த சிறுத்தை சுற்றிக் கொண்டிருந்தது. இதனுடன் இருந்த இந்த குட்டி சிறுத்தை வழி மாறி வந்திருக்கலாம் என தெரிகிறது. இதைத் தாயிடம் சேர்க்க வனத்துறையினர் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.
