வியாதி சொல்லாம வருது… கேஜி பக்தவச்சலம் ஜாலி பேச்சு..

கோவை கே ஜி மருத்துவமனை சேர்மன் பக்தவச்சலம் அவரது மருத்துவமனையில் நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்தார். நரம்பியல் பிரிவிலிருந்த பெண் நோயாளிடம் எப்படி இருக்கீங்க , என்ன வைத்தியம் செய்ய வந்தீங்க என கேட்டார். இங்க வந்தா அன்பா பாத்துக்குறாங்க. நான் மட்டும் இல்ல என் குழந்தை, என் அம்மா, எங்க பாட்டி கூட உங்க பேஷண்ட் தான் என்றார்.

அப்படியா என கேட்ட சேர்மன் பக்தவச்சலம், ” பக்கத்தில் இருந்த வாலிபரிடம் இவருக்கு சின்ன வயசு ஆனால் தலையில் கட்டி. இப்ப நல்லா இருக்காருல்ல கொஞ்ச நேரத்துல ஆபரேஷன் பண்ண போறோம்.

இங்க உழைப்புக்கு 100% கேரண்டி. ஆனா உயிருக்கு அந்த முருகன் தான் கேரண்டி. ஆறுமுகம் அல்லாஹ் இயேசப்பா இவங்க தான் கேரண்டி..

சொல்லாம வருது வியாதி. நாமலா வியாதியை உண்டு பண்றோம். அதுவா உருவாகுது. நாம குழந்தைகளை தான் உருவாக்குகிறோம்.

டென்ஷன் இல்லாம இருக்கணும் அப்படின்னா என்ன பண்ண வேண்டும். சுகர் கொலஸ்ட்ரால் பிரஷர் எல்லாம் 100க்குள்ள தான் இருக்கணும் டென்ஷன் ஜீரோவா இருக்கணும் என்றார்.

லைப்ல எந்த பிரச்சினையும் இல்லாம இருக்கணும்னா என்ன செய்யக்கூடாது தெரியுமா கல்யாணம் பண்ணக்கூடாது என கலகலப்பாக பேசி சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *