டீன் ஏஜ் சிறார் பாதிப்பு அதிகரிப்பு…
கோவை மாவட்டத்தில் டீன் ஏஜ் சிறார் விவகாரம் கையாள்வதில் பல்வேறு அரசு துறையினர் ஒருங்கிணைப்பு இன்றி அலட்சியமாக செயல்படுவதாக இருப்பதாக தெரிகிறது.
தவறு நடந்த பின்னர், பாதிப்பிற்கு பின்னர் நடவடிக்கை எடுக்கும் அவல நிலை இருப்பதால் டீன் ஏஜ் சிறார்கள் வெகுவாக பாதிப்பதாக கூறப்படுகிறது. கோவை மாவட்டத்தில், ஒரு ஆண்டில் பெண்கள், சிறார் தொடர்பாக 3761 புகார்கள் பெறப்பட்டது. இதில், சிறார் /6 பேர் திருமண வயதிற்கு முன் கர்ப்பமாக இருப்பதாக தெரியவந்தது.
18 முதல் 19 வயதில் 59 பேரும், 17 முதல் 18 வயதில் 9 பேரும், 16 முகல் 17 வயதில் 4 பேரும், 15 முதல் 16 வயதில் 3 பேரும், 15 வயதிற்கும் ஒருவரும் கர்ப்பமாக இருப்பதாக புகார் பெறப்பட்டது. கர்ப்பமான சிறார்களில் கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் 47.4 சதவீதத்தினர் வசிப்பதாக தெரியவந்தது.
பொள்ளாச்சியில் 79 சதவீதத்தினரும், ஆனைமலையில் 6.6 சதவீதத்தினரும், காரமடையில் 6.6 சதவீதத்தினரும் வசித்து வரும் தகவல் வெளியானது. சிறார் கர்ப்பம் தடுக்க சைல்ட் அமைப்பினரும். குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டியினர் உரிய முறையில் செயல்படவில்லை.அடிக்கடி புகார் வரும் பகுதிகளில் ஆய்வு நடத்த வேண்டும்,
மக்களை சந்தித்து பேசி தகவல் பெற வேண்டும் ஆனால் இதை முறையாக செய்யவில்லை என தெரிகிறது. குடும்ப வன்முறை தொடர்பாக கோவை மாவட்டத்தில் 2024ம் ஆண்டில் 139 வழக்குகளும், 2025ம் ஆண்டில் 186 வழக்குகளும் பதிவானது. சிறார் திருமணம், போக்சோ வழக்கு தொடர்பாக தீவிரமாக விசாரணை தேவை.
துடியலூர், கோவை தெற்கு, மத்திய மகளிர் போலீஸ், மேட்டுப்பாளையம் மகளிர் போலீஸ், புலியகுளம் மகளிர் போலீசில் கடந்த பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை கிடப்பில் உள்ள போக்சோ வழக்கு விசாரணைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. இன்ஸ்பெக்டர் இல்லை, விசாரணை அதிகாரி மாற்றம்,
திருமணம், சம்பவம் வேறு இடத்தில் நடந்தது எனக்கூறி பெண்கள் விவகாரம், போக்சோ விவகாரங்களை அலட்சியமாக கையாள்வதால் குற்றவாளிகள் தப்பும் வாய்ப்பு அதிகமாகி விட்டதாக தெரியவந்துள்ளது. விசாரணை அமைப்புகள், ஒருங்கிணைப்பின்மை போன்றவற்றால் மகளிர் பாதிப்பு கேள்விக்குறியாக மாறி விட்டதாக பெண்கள் புலம்பி வருகின்றனர்.
