கோவையில் வாக்குச்சாவடிகளுக்கு ‘கலர் கோடிங்’
கோவை மாவட்டத்தில் 3563 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் ஒரே பள்ளி கூட வளாகத்தில் ஐந்து முதல் எட்டு வாக்குச்சாவடிகள் அமைந்திருப்பதாக தெரிகிறது.
இந்த வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் எந்த வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டு போட வேண்டும் என தெரியாமல் குழப்பம் அடையும் நிலைமை இருக்கிறது. இதை தவிர்க்கும் வகையில் அதிக எண்ணிக்கையில் ஒரே வளாகத்தில் உள்ள ஓட்டுச் சாவடிகளை அடையாளம் காணும் முறையில் வண்ணம் தீட்டும் பணி நடக்கிறது.
அந்தப் பகுதியில் வாக்குச்சாவடிகளுக்கான வரிசை எண் அமைத்து அந்த வரிசை எண்ணுக்கு ஏற்ப வண்ணம் தீட்டப்படுகிறது. பச்சை மஞ்சள் ஆரஞ்சு சிவப்பு என பல்வேறு வண்ணங்களை தேர்தல் பிரிவினர் வாக்குச்சாவடிகளுக்கு அடையாள வண்ணமாக பயன்படுத்தி வருகின்றனர்.
கலர் கோடிங் முறையில் வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்ட இருப்பதால் வாக்காளர்களுக்கு எந்த குழப்பமும் இருக்காது. வாக்குச்சாவடிகளை கலர் வைத்து அடையாளம் காண முடியும் என தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.
