கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் தீ பிடித்தது…!

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு 630 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

இந்த வளாகத்தில் சுமார் 25 லட்சம் மெட்ரிக் டன் குப்பை குவிக்கப்பட்டுள்ளது . இன்று நள்ளிரவு இந்த குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்தது . புகையுடன் வேகமாக தீ பரவியது.

இது தொடர்பாக கோவை தெற்கு தீயணைப்பு நிலையம் புகார் தரப்பட்டது இதைத்தொடர்ந்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் . தீயின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கோவைப்புதூர் கிணத்துக்கடவு மற்றும் பல்வேறு பகுதியில் உள்ள தீயணைப்பு அலுவலர்களும் குப்பை கிடங்கு வளாகத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

அதிக வெப்பம் காரணமாக குப்பையில் மீத்தேன் கேஸ் உருவாகி இதன் மூலமாக தீப்பிடித்து இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குப்பைகளை சரிவர பிரிக்காமல் அப்படியே கொட்டுவதாலும் சாம்பல் மற்றும் தீ பிடிக்கும் பொருள்கள் காரணமாக தீ பரவி இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக போத்தனூர் போலீ சார் விசாரித்து வருகின்றனர். குப்பை கிடங்கு வளாகத்தில் தீ பரவி இருப்பது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *