அமெரிக்க மாணவியை மனைவியாக்கிய கோவை வாலிபர்…

கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ராமன் நம்பீசன், உமா ஆகியோர் கோவை குனியமுத்தூரில் வசிக்கின்றனர். இவர்கள் மகன் வாசு தேவன் (30). இவர் அமெரிக்காவில் விண்வெளி மையத்தில் பொறியாளராக வேலை செய்து வருகிறார் இவருக்கும் அமெரிக்காவின் பிலடெல்பியாவை சேர்ந்த சைமன் கசாஸ், கிறிஸ்டின் கசாஸ் ஆகியோரின் மகளான கட்டட கலை படித்து வரும் மாணவியான கரோலின் என்பவருக்கும் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு காதலானது. இரு தரப்பினரும் தங்களது காதல் விசயத்தை பெற்றோரிடம் கூறினர். இரு தரப்பு பெற்றோர்கள் இவர்களின் திருமணத்திற்கு ஒப்புதல் வழங்கினர் .

இதை தொடர்ந்து காதலர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் கோவை வந்தனர். பின்னர் இவர்கள் கோவை கந்தே கவுண்டன் சாவடி பகுதியில் உள்ள ஹார்மனி கன்வென்சன் மையத்தில் நேற்று கேரள சம்பிரதாய முறைப்படி திருமணம் செய்தனர். பட்டு வேட்டி, புடவையுடன் தம்பதியினர் திருமணத்தில் பங்கேற்றனர். இந்த விழா தொடர்பான வீடியோ. போட்டோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *