ஜாலியா , ஜாக்கிரதையா இருங்க.. நியூ இயருக்கு போலீஸ் அலார்ட்..

கோவை நகரில் புத்தாண்டை முன்னிட்டு நாளை இரவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். குறிப்பாக ரேஸ்கோர்ஸ், காந்திபுரம், ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் போலீசார். அதிகளவு ரோந்து பணியில் ஈடுபடவுள்ளனர். ஜிடி நாயுடு பாலம், உக்கடம் மேம்பாலம் போன்றவற்றில் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

நகரில் பல்வேறு இடங்களில் அதிக வேகத்தில் வாகனங்களில் செல்பவர்களை தடுக்க, மது போதையில் விபத்து ஏற்படுத்தும் வகையில் செல்பவர்களை மடக்கி பிடிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். நகரில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் செக்போஸ்ட் அமைத்து வாகன ஓட்டிகள், புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்கவுள்ளனர். நகரில் இரவு நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபடவுள்ளனர். இரவு நேர பார்ட்டி நடத்தும் ஓட்டல்களுக்கு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அத்துமீறல் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *