கோவையில் மதிப்பெண் குறைவினால் பள்ளி மாணவி தற்கொலை…!
கோவை கணபதி தங்கம்மாள் நகர் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார்.
இவரது மகன் யாழினி (17). இவர் பிளஸ் டூ பொதுத் தேர்வு எழுதி இருந்தார். நேற்று தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் யாழினி 4 5 4 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தார். ஆனால் இந்த மதிப்பெண் போதுமானதாக இல்லை என தனது தாய் நர்மதாவிடம் கூறி அழுது கொண்டிருந்தார் மேலும் தனக்கு மிகவும் குறைவான மதிப்பெண் வந்திருக்கிறது.
இதை வைத்து தான் விரும்பிய பாடத்தை தேர்வு செய்ய முடியாது. நான் என்ன செய்வது என அவர் தொடர்ந்து புலம்பி கொண்டு இருந்தார். உறவினர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வந்தனர். இந்த நிலையில் நேற்று இவர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சரவணம் பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .பள்ளி மாணவி மதிப்பெண் குறைவினால் தற்கொலை செய்த விவகாரம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
